மதத்ததால் பிரிவுப்படுத்தும் ஆர்எஸ்எஸ்-க்கு தமிழகத்தில் அனுமதி இல்லை – மனோ தங்கராஜ்

ஒன்றிய அரசின் அச்சுறுத்தலால் எடப்பாடி பழனிசாமி பதற்றத்தில் உள்ளார் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தகவல் தொழிநுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது… எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசின் அச்சுறுத்தலால் பதற்றத்தில் உள்ளார், ஒருபுறம் சனாதனம், மனுநீதி பேசுபவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு மறுபுறம் திராவிடம் என பேசுகிறார். திராவிட மாடலுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆனால் அவர் சனாதனவாதிகளின் … Read more

விதிகளை மீறியதாக நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ் நீக்கம்

 நடிகர் சங்க விதிகளை மீறியதாக நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் மற்றும் உதயா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. அதில், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலை நடத்தக் கூடாது என பல குழப்பங்கள் அந்த நேரத்தில் நிலவியது. இருந்தாலும் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து … Read more

குருகிராம் பகுதியில் சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுதங்கள் விற்பனை: போலீசார் அதிர்ச்சி!

குருகிராம், டெல்லியை ஒட்டியுள்ள குருகிராம் பகுதியில் சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுத விற்பனை செய்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகநூல் மற்றும் வாட்ஸ்அப் விளம்பரங்களில் அனுமதியின்றி ஆயுதங்கள் விற்பனை செய்ததாக குருகிராம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்காக ஒரு மொபைல் எண்ணைப் பயன்படுத்தி மூன்று பேஸ்புக் கணக்குகள் திறக்கப்பட்டன. கைத்துப்பாக்கிகள் விற்பனைக்கு என்று அந்த மொபைல் எண்ணில் இருந்து மக்களுக்கு வாட்ஸ்அப் செய்திகளும் அனுப்பப்பட்டன. கலா ஜாத்தேரி என்ற ரவுடியின் பெயரை குறிப்பிட்டு சமூக … Read more

ஆசிய கோப்பை: பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடக்கம் – இந்தியா-இலங்கை இன்று மோதல்

சில்கெட், 7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் வங்காளதேசம்-தாய்லாந்து, இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் 4 தொடர் ஒருநாள் போட்டி (50 ஓவர்) வடிவில் நடத்தப்பட்டது. 2012-ம் ஆண்டில் இருந்து இந்த போட்டி20 ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு மலேசியாவில் … Read more

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2

ஜெனீவா, கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் நேற்று முன்தினம் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ஆனால், கொரோனாவை போன்றே மனிதர்களை அச்சுறுத்தக் கூடிய புதிய வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு ‘கோஸ்டா-2’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ரஷ்ய வவ்வால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதனால், புதிய … Read more

உலக சிறுவர் தினம் , முதியோர் தினம் இன்று

உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1954ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஆலோசனைக்கமைய உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு ஆரம்பமானது. சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுக்கு மிகவும் சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 1989 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம் … Read more

உணவகங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளை செய்ய தடை.!

ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும்போது விதிகளை பின்பற்றாமல் ஊடகங்களை அழைத்துச் சென்று வீடியோ எடுத்து வெளியிடுவதாகவும், இதனால் தங்கள் உணவகங்களின் பெயர் கெடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், கெட்டுப் போன உணவு என்பதை ஆய்வகத்தில் உறுதி செய்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு அதிகாரம் இருப்பதாகவும், அதை விடுத்து முன்கூட்டியே … Read more

பாலாற்றின் குறுக்கே ஆந்திரா கட்டும் அணை: மோதிக்கொண்ட இ.பி.எஸ் – துரைமுருகன் – ஓ.பி.எஸ்!

கர்நாடகாவில் உருவாகி, ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்கு வரும் பாலாறுதான் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களின் தாகத்துக்கும், விவசாயத்துக்கும் முக்கிய நீராதாரம். இப்படி, எஞ்சிவரும் நீரையும் தடுத்து நிறுத்தும் விதமாக ஆந்திர முதல்வர் அறிவித்திருக்கும் தடுப்பணை திட்டம், தமிழக அரசியல் தலைவர்களை முட்டல் மோதலில் நிறுத்தியிருக்கிறது. பாலாறு அறிவிப்பு வெளியிட்ட ஜெகன்மோகன் ரெட்டி: ஆந்திரா, குப்பம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, `தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் கனகதாச்சியம்மன் கோவில் … Read more

வங்கிக் கடன் ஆவணம், வாடகை ஒப்பந்தங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை அமல்: நடைமுறை சிக்கலால் புதிய வசதியை தவிர்க்கும் மக்கள்

சென்னை: வங்கிக் கடனுக்கான உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு, வாடகை ஒப்பந்தம் ஆகியவற்றை இணையதளம் மூலம் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. தமிழக பதிவுத் துறையில் அனைத்து பணிகளும் கணினிமயமாக்கப்பட்டு, ‘ஸ்டார்’ மென்பொருள் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலமாக பதிவுக்கான ஆவணங்களை தயாரித்தல், வில்லங்க சான்று பெறுதல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறு. சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் வங்கிக் கடன் பெறுவதற்கான உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு (எம்ஓடி), … Read more