குஜராத் காந்திநகரில் இருந்து மும்பை வரை செல்லும் வந்தே பாரத் ரயில் பயணம் தொடங்கியது – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

காந்திநகர்: குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து – மும்பைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதே ரயிலில் அவர் கலுபூர் ரயில் நிலையம் வரை பயணம் செய்தார். குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு பிரதமர் மோடி கடந்த 2 நாட்களாக பயணம் செய்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவடைந்த சில திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். காந்திநகர் ரயில் நிலையத்தில் … Read more

இந்தியாவில் இன்று முதல் 5 ஜி சேவை! தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்!

இன்று முதல் இந்தியாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5G சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் மற்றும் ஆறாவது ஆண்டு இந்திய மொபைல் காங்கிரஸைத் தொடங்கி வைக்கிறார்.  முதலில் முக்கிய நகரங்களில் மட்டும் இந்த 5ஜி அறிமுகமாக உள்ளது, அடுத்த சில ஆண்டுகளில் இந்த சேவை நாடு முழுவதும் தொடங்கப்படும். “பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவையை அக்டோபர் 1, 2022 அன்று தொடங்கி வைப்பார், மேலும் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 1-4 வரை … Read more

இந்திய அணியில் நீடிக்கிறார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா – சவுரவ் கங்குலி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகவில்லை என சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜாஸ்பிரித் பும்ரா, தென் ஆப்ரிக்கா தொடருக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாடப் பயிற்சி மேற்கொண்ட போது, அவரது முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, நடைபெற்ற முதல் போட்டியிலிருந்து விலகினார். மீதம் உள்ள டி20 போட்டிகளில் அவர் … Read more

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யாநாதன் சிகிச்சை முடிந்து சென்னை புறப்பட்டார்!

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மெய்யநாதன் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். தனி கார் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னை அழைத்து செல்லப்பட்டார்.

சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

டெல்லி: சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. சியோமி குழுமம், அதன் இந்திய கிளையான சியோமி இந்தியா, ரெட்மி என்ற பெயரில் செல்போன்களை விற்பனை செய்து வருகிறது. அனுமதியின்றி ரூ.5,551 கோடிக்கு சமமான அன்னிய செலாவணியை இந்தியாவுக்கு வெளியே சியோமி அனுப்பியது. காப்புரிமை தொகையை அனுப்பியதாக சியோமி கூறுவது அன்னிய செலாவணியை அனுப்புவதற்கான சாக்குபோக்கு என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தொகைகளிலேயே இதுதான் … Read more

5ஜி சேவை இன்று தொடக்கம் – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி, சமீபத்தில், 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை ஏலம் எடுத்தன. மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகள் ஏலம் போனது. இந்தநிலையில், நாட்டில் 5ஜி சேவை இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். முதலில், குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு … Read more

ஒரு அணியாக நாங்கள் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் – ஹர்மன்பிரீத் கவுர்

சில்கெட், 8-வது ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் வங்காளதேசம், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை … Read more

ஆப்கானிஸ்தானில் கல்வி மையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு 32 பேர் உடல் சிதறி பலி

காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்கு சொந்தமான உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி மையம் கல்லூரி நுழைவு தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள உதவுகிறது. இந்த நிலையில் நேற்று இந்த கல்வி மையத்தில் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற்றது. இதையொட்டி உள்ளூரை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி மையத்துக்கு வந்து மாதிரி தேர்வை … Read more

சிறுவர்களையும் முதியவர்களையும் நம் அன்புக்குரியவர்களாக கருதி, அவர்களை அன்புடன் பராமரிக்கும் ஒரு சகாப்தத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதிபூணுவோம் – ஜனாதிபதி