ஏரியில் மூழ்கி பலியான ஐடிஐ மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை..!!

சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் பழங்குடியின மக்களுக்காக அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிலையத்தில் தர்மபுரி மாவட்டம் அரூர் சித்தேரி பகுதியைச் சேர்ந்த வேடன் என்பவரின் மகன் பிரவீன்குமார் (18) படித்து வந்தார். இவர் பயிற்சி நிலையம் அருகே உள்ள அரசினர் மாணவர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் மாணவர் பிரவீன் குமார், விடுதி நண்பர்களுடன் அரசு பயிற்சி நிலையத்தின் … Read more

திமுக: சென்னை மேற்கு மாவட்டம்… சிற்றரசுவுக்கு எதிராக வந்த `மூவர்’ – பின்னணி என்ன?!

ஒருவழியாக 15-வது தி.மு.க உட்கட்சித் தேர்தல் கிளைமாக்ஸை எட்டியிருக்கிறது. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல்தான் கடைசி. அக்டோபர் 7-ம் தேதி ஒருநாள் மட்டும் மனுத்தாக்கல் நடக்கிறது. அதன்பிறகு, தேர்வான மொத்த பொறுப்பாளர்களுக்கும் அக்டோபர் 10-ம் தேதி நடக்கிற பொதுக்குழுவில் ஒப்புதல் கொடுக்கப்படும். மதன்மோகன் இந்தச் சூழலில், மற்ற மாவட்டங்களை விட சென்னை மேற்கு மாவட்டத்தில்தான், சிட்டிங் மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசுக்கு எதிராகவே, அவருக்குக் கீழுள்ள பகுதிச் செயலாளர்கள், நிர்வாகிகள் என … Read more

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நவ.6-ல் நடத்தலாம்: போலீஸார் அக்.31-க்குள் அனுமதி அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை காந்தி ஜெயந்தியான அக்.2அன்று நடத்தாமல் நவ.6-ல் நடத்தவேண்டும். அதற்கு அக்.31-ம் தேதிக்குள் போலீஸார் அனுமதி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்.2 காந்தி ஜெயந்தியன்று தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.திருவள்ளூர் நகர் காவல் ஆய்வாளர் இந்த ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்ததை அடுத்து, ஆர்எஸ்எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி ஜி.கே.இளந்திரையன் … Read more

முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் பொறுப்பேற்பு

புதுடெல்லி: நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பதவியேற்றார். தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து 9 மாதங்களுக்கும் மேலாக அப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் நாட்டின் 2-வது முப்படை தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் கடந்த 28-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக … Read more

அதிமுக அலுவலக வன்முறை வழக்கு: முன் ஜாமீன் நிபந்தனைகள் தளர்வு!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பதிவான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு விதிக்கபட்ட முன் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக கூடுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு … Read more

கமல்ஹாசனால் பல கோடிகளை இழந்த வாரிசு தயாரிப்பாளர்!

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இந்தியா முழுவதும் அன்றிலிருந்து இன்றுவரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றனர்.  சில வருடங்களாக இவரது படங்கள் எதுவும் திரைக்கு வராமல் இருந்த நிலையில், இந்த வருடம் ‘விக்ரம்’ படம் திரையில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.  இந்த ஆண்டில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் பெரிதளவில் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம் எதிர்பார்த்ததை விட அதிக திருப்தியளித்ததாக ரசிகர்கள் கருதுகின்றனர், இன்றுவரை விக்ரம் படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  நீண்ட … Read more

வீராப்பு எங்க பாஸ் போச்சு? கைதுக்கு பின் பம்மிய டிடிஎப் வாசன்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் Twin throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்குகளில் சாகசங்கள் செய்தும், நீண்ட தூரம் பயணித்தும் அதை வீடியோவாக பதிவிட்டு 2k  கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். கவாசகி, நிஞ்சா உள்ளிட்ட சூப்பர் பைக்குகளில் சாகசம் செய்யும் வாசன், ஹெல்மெட்டில் கேமராவைப் பொருத்தி பைக்கின் வேகத்தை வீடியோவாக பதிவு  செய்து யூட்யூபில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி … Read more

அபுரோடு கூட்டத்தில் திரண்ட மக்களிடம் மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி..!

ராஜஸ்தானில் அபுரோடு பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்கத் திரண்டிருந்த போதும் பத்து மணிக்கு மேல் மைக்கையும் ஒலிபெருக்கிகளையும் பயன்படுத்தக்கூடாது என்ற கட்டுப்பாட்டை மதித்து பிரதமர் மோடி தமது பேச்சை ரத்து செய்தார். ஒலிபெருக்கி இல்லாமல் மக்களை நேரடியாக சந்தித்து அவர் அவர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். தமது பேச்சை வெளியிட முடியாமல் போனதற்காக அவர் பொதுமக்களிடம் வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் Source link

அமெரிக்காவில் புதிய வாழ்க்கையைத் தொடங்க உதவிய PR நிறுவனத்தை கைவிட்ட ஹரி-மேகன் தம்பதி!

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தங்களுக்கு உதவிய PR நிறுவனத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் மேகன் மார்க்கல் நடிகையாக இருந்த நாட்களில் இருந்து அவருக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. பிரித்தானிய அரச குடும்பத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் புதிய வாழ்க்கையைத் தொடங்க உதவிய PR நிறுவனத்தை இளவரசர் ஹரியும் மேகனும் கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020-ல் மூத்த அரச குடும்ப உறுப்பினர்களாக இருந்து விலகிய பிறகு ஹரி மற்றும் மேகன் அமெரிக்காவில் ஒரு புதிய … Read more