5-ஆம் தலைமுறை டெலிகாம் சேவையான 5ஜி இன்று அறிமுகம்

புதுடெல்லி: 5-ஆம் தலைமுறை டெலிகாம் சேவையான 5ஜி இன்று துவக்கப்படுகிறது. இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் 5ஜி சேவை முதற்கட்டமாக டெல்லியில் வழங்கப்பட இருக்கிறது. இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வையும் இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வு அக்டோபர் 4-ஆம் … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணிப்பு

நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா  புறக்கணித்துள்ளது. உக்ரைனின் 4 மாகாணங்களை வாக்கெடுப்பு மூலம் ரஷ்யா கைப்பற்றியதற்கு எதிராக தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது.

இந்தியாவில் அதிவேக 5ஜி இணைய சேவையை டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் தொடங்கி வைக்க உள்ளார் பிரதமர் மோடி!

டெல்லி: இந்தியாவில் அதிவேக 5ஜி இணைய சேவை இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி தொடங்கி  வைக்க உள்ளார். முதற்கட்ட உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மற்றும் குஜராத்தின் அகமதாபாத்தை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமத்தில் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வருகிறது.

திடீர் உடல்நலம் பாதிப்பு: அமைச்சர் மெய்யநாதன் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

 திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட  விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் கார் மூலமாக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரிய பாதிப்பு … Read more

சம்பளத்தை உடனே கொடு: போராட்டத்தில் ஈடுபட்ட சினிமா துணை நடிகர்களால் பரபரப்பு

காரைக்குடி அருகே சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற துணை நடிகர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனக்குக் கூறி போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் பங்களாவில் ,நடிகர் அருள்நிதியின் ‘மூர்க்கன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில், நடிப்பதற்காக, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து துணை நடிகர்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வரும் … Read more

பிரம்மோற்சவ விழா 5-வது நாள்: காலை மோகினி அலங்கார வீதிஉலா;இன்று இரவு கருடசேவை

திருமலை, திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கற்பக விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை கற்பக விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அப்போது லேசான தூறல் பெய்தது. கொட்டும் மழையில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் … Read more

இரானி கோப்பை: சவுராஷ்டிரா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இன்று மோதல்

ராஜ்கோட், 2019-20-ம் ஆண்டு ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த போட்டி தினசரி காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். இரு அணி வீரர்கள் விவரம்:- ரெஸ்ட் ஆப் இந்தியா:- மயங்க் அகர்வால், பிரியங் பாஞ்சல், அபிமன்யு ஈஸ்வரன், யாஷ் துல், சர்ப்ராஸ் கான், ஜெய்ஸ்வால், ஹனுமா விஹாரி (கேப்டன்), சவுரப் குமார், கே.எஸ்.பரத், … Read more

உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்குவோம் – அமெரிக்கா அறிவிப்பு

நியூயார்க், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ரஷிய அதிபர் புதின் மற்றும் அவரது பொறுப்பற்ற வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தல்களால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பயப்படப் போவதில்லை. புதினின் செயல்பாடுகள் அவர் போராடிக்கொண்டிருப்பதற்கான அறிகுறியாகும். அவரால் அண்டை நாட்டின் நிலப்பரப்பைக் கைப்பற்றி அதிலிருந்து தப்பிக்க முடியாது. உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்து ராணுவ தளவாடங்களை வழங்குவோம். “நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க அமெரிக்கா எங்கள் நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து முழுமையாக தயாராக … Read more

ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு!சாமானியர்களுக்கு பெரும் அதிர்ச்சி!!

ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டம் நேற்று முடிவடைந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டின் பணவீக்கத்தை குறைக்கவும், பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரெப்போ ரேட் விகிதத்தை 0.50 சதவீதம் அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 5.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் வட்டி … Read more

அக்டோபர் மாதத்தில் மட்டும் 9 நாட்களுக்கு வங்கி விடுமுறை!!

தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த ஆண்டு துவங்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. இப்போது நடந்து கொண்டிருக்கும் அக்டோபர் மாதத்தில் மீதமிருக்கும் … Read more