தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல்

சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 15 நாட்களுக்குள் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  விரைவில் தீர்வு சாரதி அனுமதிப்பத்திர அட்டை தட்டுப்பாடு காரணமாக சுமார் ஆறு இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்தன.  இந்தநிலையில், அதற்கான அட்டைகளை ஒஸ்ரியாவில் இருந்து இறக்குமதி செய்ய  தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் … Read more

மீண்டும் வெடித்தது சிறுத்தை மர்மச்சாவு விவகாரம் ரவீந்திரநாத் எம்.பி மீது நடவடிக்கை கோரி தேனியில் வனத்துறை அலுவலகம் முற்றுகை

தேனி: சிறுத்தை மர்மச்சாவு விவகாரத்தில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் மீது நடவடிக்கை கோரி, கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் தேனி மாவட்ட வன அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கோம்பை பகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத், காளீஸ்வரன் மற்றும் தியாகராஜன் ஆகியோருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில் உள்ள மின்வேலியில் கடந்த செப். 28ம் தேதி ஆண் சிறுத்தை சிக்கி உயிரிழந்தது. வனத்துறையினர் எம்பி ரவீந்திரநாத், தோட்ட … Read more

குஜராத்தில் மோடி உருக்கம்; மோர்பி விபத்தால் துயரத்தில் உள்ளேன்

கெவாடியா: குஜராத்தில் நலத்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ‘மோர்வி கேபிள் பாலம் விபத்தால் கடும் துயரத்தில் உள்ளேன்’ என தழுதழுத்த குரலில் உருக்கமாக பேசினார். விரைவில் தேர்தல் நடக்க உள்ள குஜராத் மாநிலத்திற்கு பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்றுள்ளார். தனது பயணத்தின் 2வது நாளான நேற்று, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, கெவாடியாவில் படேல் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின், மோர்பி கேபிள் பாலம் விபத்தில் … Read more

கர்நாடகா மடாதிபதி தற்கொலை விவகாரம் கைதான கல்லுாரி மாணவி குறித்து திடுக்| Dinamalar

பெங்களூரு, மடாதிபதியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் இளம்பெண், மற்றொரு மடாதிபதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான கல்லுாரி மாணவி மொபைல் போனில், பல பிரமுகர்களுடன் ஆபாசமாக பேசிய தகவல்கள் கிடைத்துள்ளன. கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பண்டி மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமி, 24ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கடிதத்தில், தற்கொலைக்கு மற்றொரு மடாதிபதி மற்றும் இளம்பெண் தான் … Read more

ஹன்சிகாவுக்கு விரைவில் காதலருடன் திருமணம் ?

சமீபத்தில் ஹன்சிகாவின் நடிப்பில் வெளியான 'மகா' திரைப்படம் சுமாரான விமர்சனத்தை பெற்றது . தற்போது சிம்பு நடித்த 'வாலு' படத்தை இயக்கிய விஜய்சுந்தர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா. படத்துக்கு 'கார்டியன்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தை சபரி – குருசரவணன் இயக்கியுள்ளனர். இதில் மூன்று கெட்டப்புகளில் ஹன்சிகா நடித்துள்ளார். திரில்லராக இந்த படம் உருவாகிறது. இந்நிலையில் சமீபகாலமாக ஹன்சிகா விரைவில் திருமணம் செய்ய போவதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. … Read more

“அண்ணாமலைக்கு விளம்பரமேனியா” – திருமாவளவன் விமர்சனம்

கடலூர்: “ஆளுநர் அவர் வகிக்கும் பதவியை மறந்து ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகின்றார். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு விளம்பரமேனியா உள்ளது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி விமர்சித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடலூருக்கு வந்திருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி இன்று (அக்.31) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்தில் … Read more

மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி: தம்பி – தங்கைகளுக்கு சீமான் அறிவுறுத்தல்!

இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்க சென்னைக்கு வருகை தரும் தொண்டர்களுக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! நாளை நவம்பர் 01 – ‘தமிழ்நாடு நாள்’ அன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத்திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து முன்னெடுக்கும் … Read more

நாடு முழுவதும் சோதனை அடிப்படையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம்..!

நாடு முழுவதும் சோதனை அடிப்படையில், டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 9 வங்கிகள் டிஜிட்டல் நாணயங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் நாணயங்களை முதற்கட்டமாக, மொத்த பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தி, பங்கு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் எனவும், அரசு பத்திரங்களை வாங்கிக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த … Read more

ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசி உரையாடல்… ஒற்றை கோரிக்கை: கோபத்தின் உச்சத்தில் அலறிய ஜோ பைடன்

உதவி கோரிய நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கோபத்தில் அலறியதாக கூறப்படுகிறது. உக்ரைனுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் முன்னெடுத்த தொலைபேசி உரையாடலின் போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கோபத்தின் உச்சியில் அலறியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர், இதுவரை 1 பில்லியன் டொலர் அளவுக்கு இராணுவ உதவிகளை அமெரிக்கா மட்டும் முன்னெடுத்துள்ளது. ஆனால் மீண்டும் மீண்டும் உதவி கோரிய நிலையில், … Read more

பொருளாதார நெருக்கடி சூழல் சீரானதும் ராமேஸ்வரம் கோயில் சொத்துகள் குறித்து இலங்கைக்கு சென்று ஆய்வு: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி சூழல் சீரானதும், அந்நாட்டுக்குச் சென்று ராமேஸ்வரம் கோயில் சொத்துக்கள்  குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை ராமேஸ்வரம் வந்தார். ராமநாத சுவாமி கோயிலில், பக்தர்கள் தரிசனம் செய்யும் பகுதி, தீர்த்தமாடும் பகுதி மற்றும் கோயில் பிரகாரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், அறநிலையத்துறை கமிஷனர் … Read more