பருவ மழை தொடங்கியுள்ளதையொட்டி செம்பரம்பாக்கம் ஏரி மதகில் வண்ணம் பூசும் பணி தீவிரம்

குன்றத்தூர்: வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை குடிநீர்  ஏரி மதகில்  வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. பருவ மழை  தொடங்கியுள்ளதை தொடர்ந்து, தமிழகத்தில் தொடர்ந்து கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையின் முக்கிய குடிநீர்  ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்க  தொடங்கி உள்ளது. தொடர் மழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, ஏரி நிறைந்தால் உபரிநீர் திறப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த … Read more

பகத்சிங் வேடத்தில் ஒத்திகை, தூக்கு கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் மரணம்; கர்நாடகாவில் சோகம்

சித்ரதுர்கா: தூக்கு மேடையில் ஏறும் பகத்சிங் வேடத்திற்காக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் கழுத்தில் கயிறு இறுக்கி பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா டவுன் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பாக்யலட்சுமி. இவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். தம்பதிக்கு 12 வயதில் சஞ்சய் என்ற மகன் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள  தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், கர்நாடக உதய தினத்தை … Read more

பலினோ, எக்ஸ்.எல்.,6 மாருதியின் சி.என்.ஜி., அப்டேட்| Dinamalar

புதுடில்லி:மாருதி சுசூகியின் பிரீமியம் கார்களான, ‘பலினோ, எக்ஸ்.எல்., 6’ ஆகிய இரு கார்களும், சி.என்.ஜி.,எரிபொருளில் இயங்கும் வகையில், முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, சி.என்.ஜி., எரிபொருளில் இயங்கும் மாருதி கார்கள் எண்ணிக்கை, 12 ஆக அதிகரித்துள்ளன. பலினோ கார், ‘டெல்டா, ஜெட்டா’ என 2 சி.என்.ஜி., வேரியன்ட்டுகளிலும், எக்ஸ்.எல்., 6 கார், ஜெட்டா வேரியன்ட்டில் மட்டும் என, சிறு சிறு தொழில்நுட்ப மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. கார் விலை டெல்டா வகை ஜெட்டா வகை பலினோ 8.28 … Read more

தேர்தலில் போட்டியிடத் தயார் : கங்கனா

தேசிய விருது பெற்ற நடிகையான கங்கனா, தேசப்பற்று மிக்க நடிகையும்கூட. அடிக்கடி அவர் கூறும் சமூக மற்றும் அரசியல் கருத்துகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அவர் அரசியலுக்கு வந்தால் மிகப்பெரிய சக்தியாக மாறுவார் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நான் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று கங்கனா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: 2024 தேர்தலில் போட்டியிட நான் தயார். என் எண்ணங்களோடு ஒத்துப்போகிற பாஜக சீட் கொடுத்தால் அதற்கு நான் … Read more

ரஷ்ய அதிபரின் படையில் நோய் பீடிக்கப்பட்ட கைதிகள்| Dinamalar

மாஸ்கோ, உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்பதற்காக, ‘வாக்னர் குரூப்’ என்ற ரஷ்ய அதிபரின் தனிப்பட்ட படையில், ‘எய்ட்ஸ், ஹெபாடிடிஸ் – சி’ நோய்களால் பீடிக்கப்பட்ட சிறை கைதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த பிப்ரவரியில் துவங்கிய இந்தப் போர், எட்டு மாதங்களைக் கடந்தும் தொடர்கிறது. உக்ரைனின் பதில் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்ய படைகள் திணறுகின்றன. இந்நிலையில், ரஷ்ய அதிபரின் தனிப்பட்ட ராணுவம் என்றழைக்கப்படும், வாக்னர் … Read more

ஜெயின் கோயிலில் திருட்டுப்போன பொருள்கள்; மன்னிப்புக் கடிதத்துடன் திருப்பிக் கொடுத்த திருடன்

மத்தியப் பிரதேச மாநிலம், பாலகாட் மாவட்டத்திலுள்ள சாந்திநாத் திகம்பர் ஜெயின் கோயிலிலிருந்து அக்டோபர் 24-ம் தேதி, ‘சத்திரஸ்’ எனும் குடை வடிவ அலங்காரப்பொருள் உட்பட 10 அலங்கார வெள்ளிப் பொருள்கள், மூன்று பித்தளைப் பொருள்கள் காணாமல் போயின. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறது. காவல்துறையினரும் கொள்ளையர்களைத் தேடிவந்தனர். போலீஸ் இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், லாம்டா பஞ்சாயத்து அலுவலகத்துக்கு அருகிலுள்ள குழியில், ஒரு பை கிடப்பதைப் பார்த்திருக்கிறார். … Read more

கட்டுப்பாட்டை இழந்த குளத்தில் கவிழ்ந்த கார்.. ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு..!

திருவாரூர் மாவட்டம் விசலூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், குளத்தில் கவிழ்ந்ததில் ஒரு வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த சாமிநாதன், தனது மனைவி, ஒரு வயது கைக்குழந்தை மற்றும் பெற்றோருடன் திருவாரூரில் உள்ள குல தெய்வ கோயிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பியபோது, கார் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாமிநாதனின் மனைவி லட்சுமியை தவிர, மற்ற அனைவரும் சடலமாக மீட்கப்பட்டனர். Source link

கனமழை | சென்னை உட்பட 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழையும் எனவும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (அக்.31) கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்களில் மாலையில் … Read more

மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு அலட்சியம்: ஓபிஎஸ் கண்டனம்!

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையிலும், வெள்ள தடுப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும், திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: வட கிழக்கு பருவமழையின் போது சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதும், பல இடங்களில் உள்ள மக்கள் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதும், அவர்களுடைய உடைமைகள் பறிபோவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாக இருக்கின்ற நிலையில், … Read more