Chennai Rains : கொட்டித் தீர்த்த மழை… 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – வெதர்மேன் கூறுவது என்ன?

Chennai Rains : வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (அக். 31) கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையொட்டி, சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று (அக். 31) மாலை முதல் தொடர் மழை … Read more

வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் இவ்வாண்டு மொத்தம் ரூ. 86,566 கோடி வருவாய்: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் இவ்வாண்டு அக்டோபர் வரை மொத்தம் ரூ. 86,566 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வணிகவரியாக அக்டோபரில் ரூ.10,678 கோடியும், 2022 ஏப்ரல் அக்டோபர் வரை ரூ.76,839 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் அக்டோபரில் ரூ.1,131 கோடியும், 2022 ஏப்ரல் அக்டோபர் வரை ரூ.9,727 கோடியும் ஈட்டப்பட்டது என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இரு விரல் பரிசோதனை செய்வோர் தவறான நடத்தை குற்றவாளிகள்!: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இரு விரல் பரிசோதனை செய்வோர் தவறான நடத்தை குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்பில், இரு விரல் பரிசோதனை செய்யும் நடைமுறை உள்ளது. பெண்ணுறுப்பில் ‘ஹைமன்’ (கன்னித்திரை) என்ற சவ்வு  இருக்கும். அந்த சவ்வு கிழிந்துள்ளதா?, இல்லை… கிழியாமல் அப்படியே  இருக்கிறதா? என்று இரு விரல்களை உள்விட்டு பார்க்கிறார்கள். சாமானிய  மக்களில் இருந்து மருத்துவம் படித்த நிபுணர்கள் வரையிலும் இந்த நடைமுறையை  … Read more

கைதிகளுக்கு ஓட்டு உரிமை? விளக்கம் கேட்கிறது கோர்ட்!| Dinamalar

புதுடில்லி :சிறை கைதிகளுக்கு ஓட்டுரிமை அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு, உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆதித்ய பிரசன்னா பட்டாச்சார்யா என்ற சட்டப் பல்கலை மாணவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டதாவது:சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் ஓட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளது. ‘சிறையில் அல்லது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளவர் அல்லது கடுங்காவல் தண்டனை பெற்றவர் ஓட்டளிக்க முடியாது’ … Read more

விஜய் 67ல் விஷாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதை தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது படத்தின் பிரதான வில்லன் … Read more

பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழா பேரணி, குத்து டான்ஸ் போட்ட செவிலியர்கள், அலுவலர்கள்

பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழா பேரணி, குத்து டான்ஸ் போட்ட செவிலியர்கள், அலுவலர்கள் Source link

ட்விட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்கிற்கு உதவும் சென்னை இளைஞர்!!

ட்விட்டர் நிறுவனத்தை நடத்த எலான் மஸ்கிற்கு சென்னை இளைஞர் ஒருவர் உதவி வருகிறார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான பிறகு தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சிஇஓ பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டனர். முன்னணி ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை நடத்துவதில் சென்னை இளைஞர் ஒருவர் உதவி … Read more

“நான் ஸ்லிப்பாகி விழப்போனதால் ராகுல் காந்தி எனது கையைப் பிடித்தார்!"- விளக்கமளித்த நடிகை பூனம் கவுர்

காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால் கட்சியை வலுப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை’ என்ற பெயரில் நடைப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் கன்னியாகுமரியில் நடைப்பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தெலங்கானாவிலும் தன் பயணத்தை மேற்கொண்டார். இதனிடையே ராகுல்காந்தி மீது பா.ஜ.கவைச் சேர்ந்த ப்ரீத்தி காந்தி மோசமான விமர்சனத்தை முன்வைத்து இருந்தார். தெலங்கானாவில் நடைப்பயணத்தை மேற்கொண்ட ராகுல் காந்தியுடன் உஸ்மானியா … Read more

சென்னையை புரட்டியெடுத்த மழை | அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மீண்டும் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினமே தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அண்மையில் வங்கக் கடலில் உருவான சித்ரங் புயலால், கடந்த வாரத்தில் துவங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை, சற்றே தாமதமாக தொடங்கினாலும் மழையின் தன்மையை பாதிக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நாளை … Read more

கனமழை எச்சரிக்கை… நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளதையடுத்து தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை. திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் இன்று மாலை முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும், குறிப்பாக நாளை (நவம்பர் 1) கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரி்க்கை இன்று எச்சரிக்கை விடுத்திருந்தது. வானிலை ஆய்வு … Read more