#BREAKING:- நாளை 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று காலை முதல் சென்னை திருவள்ளூர் முழுவதும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதேபோல் செங்கல்பட்டு,சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக கன மழை எச்சரிக்கையால் … Read more

ஜெர்மன் பெண்ணின் கிரிப்டோ இன்வெஸ்ட்மென்ட் மெசேஜ்… லட்சங்களை இழந்த சேலம் இளைஞர்! – என்ன நடந்தது?

சேலம், அரிசிபாளையம் கவனித் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மகன் பார்த்திபன். இவருக்கு கடந்த வாரம் ஜெர்மனியிலிருந்து கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று மெசேஜ் வந்திருக்கிறது. அதை நம்பிய பார்த்திபன் மெசேஜில் குறிப்பிட்ட மெயிலில் தொடர்பு கொண்டபோது லிசா பிஞ்சு என்ற இளம்பெண் பேசியிருக்கிறார். அவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபங்களை பற்றி எடுத்துரைத்திருக்கிறார். அவர் பேச்சை நம்பிய பார்த்திபன், யூடியூப் சேனலில் கிரிப்டோ கரன்சி குறித்து … Read more

38 சென்சார்கள், 68 சிசிடிவி கேமராக்கள்… – சென்னை வெள்ளத்தைக் கண்காணிக்க தயார் நிலையில் கட்டுப்பாட்டு அறை

சென்னை: சென்னையில் பல்வேறு பாதிப்புகளை கண்டறிய ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரம் : கட்டுப்பாட்டு அறை : பருவமழையை முன்னிட்டு மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் 24 மணிநேரமும் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கிடுக்கிப்பிடி!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் … Read more

ஆண் சிங்கங்கள் பிடியில் சிக்கியிருந்த நீர்யானை குட்டியை காப்பாற்றிய நீர் யானைகள்..!

2 ஆண் சிங்கங்கள் பிடியில் சிக்கியிருந்த நீர்யானை குட்டியை, 2 பெரிய நீர் யானைகள் காப்பாற்றிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கென்யா வனப்பகுதியில் கடந்த 11ம் தேதி இந்த வீடியோ காட்சி பதிவிடப்பட்டுள்ளது. அதில் தனியே நடமாடிய நீர் யானை குட்டியை 2 சிங்கங்கள் கடித்து குதறி கொண்டிருப்பதும், அவ்வழியே வந்த நீர்யானை கூட்டத்தில் இருந்த 2 பெரிய நீர் யானைகள், அருகில் வந்ததும், 2 சிங்கங்களும் ஓட்டம் பிடித்த காட்சியும் உள்ளன. Source link

150 பேர்கள் மரணமடைந்த ஹாலோவீன் கொண்டாட்டம்… உலகப் புகழ் K-Pop பாடகரும் பலியான சோகம்

தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியிலேயே முதன் முறையாக Lee Jihan அடையாளம் காணப்பட்டு, பின்னர் பிரபலமானார். ஹாலோவீன் கொண்டாட்டங்களில் Lee Jihan கலந்து கொண்டதாகவும், அதில் நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளதாக தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தின் இடையே கூட்ட நெரிசலில் சிக்கி உலகப் புகழ் K-Pop குழுவின் பாடகர் ஒருவரும் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகப் புகழ் K-Pop குழுவின் பாடகரான 24 வயது Lee Jihan என்பவர் மரணடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

ராமேஸ்வரம் திருக்கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரதம் இன்று வெள்ளோட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் வீற்றிருக்கும் அருள்மிகு பர்வத வர்த்தினி அம்மன் தங்க ரதம் கடந்த 12 ஆண்டுகளாக ஓடாமல் இருந்தது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் மேலான கவனத்திற்கு சென்றவுடன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும், துறை அலுவலர்களும் இராமேஸ்வரத்திற்கு வருகை தந்து தங்க ரதத்தை ஓட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் இன்று … Read more

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாக்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் கனமழை என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரசிகரின் செயலால் மனமுடைந்த விராட் கோலி: கடுப்பான அனுஷ்கா ஷர்மா

மும்பை: விராட் கோலி தங்கியிருந்த ஓட்டல் அறைக்குள் நுழைந்து ரசிகர் வீடியோ எடுத்தது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா ஆவேசமடைந்துள்ளார். கடந்த காலத்தில் சில ரசிகர்கள் இரக்கமோ, கருணையோ காட்டாத சில சம்பவங்களை நானும் அனுபவித்திருக்கிறேன்; சுயக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது அனைவருக்கும் நலம்; இதே போல உங்கள் படுக்கையறையில் நடந்தால் சும்மா இருப்பீர்களா?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்,

வலிமையான, அற்புதமான பெண்மணி சமந்தா: சிரஞ்சீவி புகழாரம்

சமந்தா நடித்துள்ள யசோதா படம் நவம்பர் 4ம் தேதி வெளிவர இருக்கிறது. சமீபத்தில் அதன் டீசர் வெளியாகி வைரல் ஆனது. இந்த நிலையில் யசோதா படத்திற்கு டிரிப் ஏற்றிய நிலையில் டப்பிங் பேசிய போட்டோவை வெளியிட்ட சமந்தா, ‛‛எனக்கு மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோய் பாதிப்பு இருப்பதாகவும், விரைவில் அதிலிருந்து குணமாகி வருவேன்'' என கூறினார். இது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் சமந்தாவுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளித்து வருகிறார்கள். சமந்தாவின் முன்னாள் … Read more