புதுடில்லி : வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவைஉச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் அபய் எஸ் ஓஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ”ஓட்டளிப்பது வாக்காளர்களின் அடிப்படை உரிமை. ஆதாரை காரணமாக காட்டி அந்த உரிமையை வாக்காளரிடமிருந்து பறிக்க முடியாது” என வாதிட்டார்.
இதையடுத்து இதே கோரிக்கையுடன் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன் சேர்த்து இந்த மனுவையும் விசாரிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement