சென்னை: ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை காலத்தில், ஆவின் நிறுவனத்தின் இனிப்பு வகைகள் ரூ.116 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவின் இயக்குநர் ந.சுப்பையன் கூறியதாவது:
இந்த ஆண்டு 11 வகையான சிறப்பு இனிப்புவகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. சிறப்புஇனிப்பு வகைகள் 25 இடங்களில் தயாரிக்கப்பட்டு, விற்பனை நடைபெற்றது. இதுபோல, கார வகைகளும் விற்பனை செய்யப்பட்டன. ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ.116 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.
சென்னையில் ரூ.55 கோடி
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.57 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் ரூ.55 கோடிக்கு இனிப்பு வகைகள் விற்பனை நடைபெற்றது. இதற்கடுத்து சேலம், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய மாவட் டங்களிலும் விற்பனை நன்றாக இருந்தது. சிறப்பு இனிப்பு வகைகள் மட்டுமின்றி கார வகைகள் விற்பனையும் நன்றாகவே இருந்தது. அடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வரவுள்ளது. இந்த பண்டிகை முடியும்போது, ரூ.200 கோடி விற்பனை இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.