புதுடில்லி: பா.ஜ. எம்.பி. கொடுத்த புகாரின் பேரில் ”வயர் ” செய்தி இணையதளை பத்திரிகை நிறுவனர் சித்தார்த் வரதராஜன் வீடு, அலுவலகங்களில் இன்று இரவு டில்லி க்ரைம் பிராஞ்ச் போலீசார் ரெய்டு நடத்தினர்.
”வயர்” நிறுவனத்தின் சித்தார்த் வரதராஜன், எம்.கே. வேணு ஆகியோர் டில்லியை தலைமயிடமாக கொண்டு ஹிந்தி, மராத்தி, உருது ஆகிய மொழிகளில் ” வயர்” செய்தி இணையதள பத்திரிகை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.வைச் சேர்ந்த அமித்மாலியவியா தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக ”வயர்’ செய்தி இணையதள நிறுவனர் சித்தார் வரதராஜன், செய்தி ஆசிரியர் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் டில்லி க்ரைம் பிராஞ்ச் போலீசார் ரெய்டு நடத்தி வீட்டில் இருந்த கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள், ஆகியவற்றினை பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement