இந்திய அணியின் தோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர்: சோகத்தில் உயிரிழக்கும் நகைச்சுவை வீடியோ



இந்தியா தோல்வியடைந்ததை தாங்க முடியாமல் இந்திய ரசிகர் இறந்து கொண்டிருக்கும் போது அவரை மரோ முஜே மரோ கை காப்பாற்றுகிறார்.


சுமார் 3.4 மில்லியன் மக்கள் பார்த்ததுடன், 534k மக்கள் வீடியோவை லைக் செய்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை தாங்க முடியாமல் இறக்கும் இந்திய ரசிகரை காப்பாற்ற முயற்சிக்கும் மற்றொரு ரசிகரின் நகைச்சுவையான வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணியை இந்திய அணி அபாரமாக வென்றதை தொடர்ந்து, கிரிக்கெட் ரசிகர் ஒருவர் வெளியிட்ட ஓ பாய் மாரோ முஜே மாரோ (O Bhai Maro Mujhe Maro) என்ற வீடியோ பயங்கரமாக ஹிட் அடித்தது.
சமூக ஊடகங்களில் “ஓ பாய் மாரோ முஜே மாரோ” என்ற தலைப்பில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை கூட பறக்கவிட்டனர்.

அவர் தற்போது கவுரவ் தனேஜா (GAURAV TANEJA) என்ற மற்றொரு கிரிக்கெட் ரசிகருடன் சேர்ந்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை தாங்க முடியாமல் இந்திய ரசிகர் கவுரவ் தனேஜா மைதானத்திலேயே இறந்து கொண்டிருக்கும் போது, அவரை மரோ முஜே மரோ கை (MARO MUJHE MARO GUY) காப்பாற்றும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.

மொமின் சாகிப்(Momin Saqib) பகிர்ந்துள்ள இந்த வீடியோவை சுமார் 3.4 மில்லியன் மக்கள் பார்த்ததுடன், 534k மக்கள் லைக் செய்து வைரல் ஆகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுடன் இந்திய அணி தோல்வியடைந்தால் மொமின் சாகிப் மற்றும் கவுரவ் தனேஜா இருவரும் கதறி அழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் அந்த வீடியோவில் கவுரவ் தனேஜா நகைச்சுவையாக மயக்கமடைவது போல் பாசாங்கு செய்கிறார், அவரை மொமின் சாகிப் காப்பாற்ற முயற்சிக்கிறார், அவர் கையில் பந்தை கொடுத்து, ‘கவரவ் பாய்’ என்று மீண்டும் மீண்டும் கத்துகிறார். 

கல் ஹோ நா ஹோவின் (Kal Ho Na Ho) பாடல் பின்னணியில் ஒலிக்கும் போது, மோமின் கிட்கேட் ஊட்டி இறக்கும் இந்திய ரசிகரை காப்பாற்ற முயற்சிக்கிறார், 


கூடுதல் செய்திகளுக்கு: மனிதர்களை உயிருடன் மண்ணில் புதைக்கும் சிகிச்சை முறை: 1 மணி நேரத்திற்கு 47 லட்சம் வசூலிக்கும் ரஷ்ய நிறுவனம்

மேலும் மொமின் நாற்காலி ஒன்றில் தொங்கிக் கூச்சலிடுவதையும் காண முடியும், வேடிக்கை நிறைந்ததாக காணப்பட்டதால் இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.