பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அணியினர் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு, ஒற்றைத் தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம்
தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த
மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனால் அதிருப்தி அடைந்த
, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்துள்ளார். எனினும் இதுவரை நடைபெற்ற சட்டப் போராட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவு இறுதியானது என்பதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் புடைச்சூழ பசும்பொன்னுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம், முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு மட்டுமல்லாமல், அதிமுக சார்பில், வெள்ளிக் கவசம் வழங்கினார்.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடைத்த உற்சாக வரவேற்பு, எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிருப்தி அடையச் செய்துள்ளது. மேலும், உண்மையான அதிமுக நாங்கள் தான் என்றும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆரூடம் தெரிவித்துக் கொண்டனர்.
இதே போல், கடந்த 27 ஆம் தேதி மருது பாண்டியர் குரு பூஜையில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 80 கார்களில் வந்திருந்த கட்சி நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வம் பின்னால் அணிவகுத்து வந்தனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியை அப்படியே ஓ.பன்னீர்செல்வம் பின்பற்றி வருவதாக அவரது ஆதரவாளர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்கள் ஆதரவு பெருகி வருவது, எடப்பாடி பழனிசாமி அணியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.