சென்னை: இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவருக்கு ரூ.5,000 அபராதமும் விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
