‘உங்கள் தங்கத்தை வேலை செய்ய விடுங்க ’- முத்தூட் ஃபைனான்ஸின் புதிய திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய தங்கக் கடன் என்பிஎஃப்சி நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ், தங்களின், சமீபத்திய அனைத்து ஊடகம் முழுவதிலும்  சந்தைப்படுத்தும்  பிரச்சாரத்தைத் தொடங்குவதாக அறிவித்தது, அதில் அவர்களின் புதிய சின்னமான ‘கோல்ட்மேன்’ இடம்பெறும், மேலும் இந்த பிரச்சாரம், அவர்களின் பல்வேறு கடன் தேவைகளுக்காக ‘உங்கள் தங்கத்தை வேலை செய்ய விடுங்க ‘ என்ற செய்தியை எடுத்துச்செல்லும்.  மைத்ரி அட்வர்டைசிங் ஒர்க்ஸ் நிறுவனத்தால் கருத்தாக்கம் செய்யப்பட்டு  மற்றும் வடிவமைக்கப்பட்ட இந்த பிரச்சாரமானது, வீட்டில் செயலற்ற தங்கத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் மற்றும் தங்கக் கடன்கள் அனைத்தும் கால நிலை கடன்கள் என்பதை எடுத்துக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பிரச்சாரம் நகைச்சுவை அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது மற்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ்  ஆகிய நான்கு மொழிகளில் முறையே ஜானி ஆண்டனி, பிரம்மானந்த், சாது கோகிலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகிய முன்னணி இந்திய நகைச்சுவை முகங்களால்  நடத்தப்படுகிறது.

முத்தூட் ஃபைனான்ஸ்

இந்த தனித்துவமான பிரச்சாரம், வீட்டில் காணப்படும் செயலற்ற தங்கத்தை ‘கோல்ட்மேன்’ என்ற கதாபாத்திரத்தின் வடிவத்தில் வெளிப்படுத்துகிறது. சமூக பிரிவுகள் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளில் உள்ள மக்களின் பல்வேறு நிதித் தேவைகளை தங்கக் கடன்கள் எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும் என்பதையும், சந்தையில் உள்ள மற்ற கடன் தெரிவுகளை  விட ஒன்றைப் பெறுவதற்கான வசதியையும், இது எடுத்துக்காட்டுகிறது. செயலற்ற தங்கத்தை அதன் உரிமையாளர்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும்  என்பதைக் காட்டுவதற்கு, அயல் நாட்டில் கல்வி கற்பது, வணிகத் தேவைகள் மற்றும் வீட்டு மேம்பாடு போன்ற நிகழ்வுகளை சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் மூலம், இந்த  நிறுவனம் புதிய மற்றும் இளைஞர்களுக்கு  அவர்களின் கனவுகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற அவர்களின் தங்க சொத்துக்களை எவ்வாறு பணமாக்க முடியும் என்பதைக் காண்பித்து அவர்களுடன் இணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,

மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்ட இந்த பிரச்சாரமானது,  இந்த செய்தியை பரவ செய்வதற்கு, டிவி, பிரிண்ட், ரேடியோ, கேபிள் டிவி, இதழ்கள், தியேட்டர், மல்டிபிளக்ஸ், OOH, BTL, தரை செயல்பாடுகள் , OTT, YOUTUBE, சமூக ஊடகங்கள் மற்றும் பிற டிஜிட்டல் செயல்பாடுகளுடன் கூடிய பல்வேறு ஊடக கலவையைப் பயன்படுத்துகிறது. அவை அனைத்தும் ‘உங்கள் தங்கத்தை வேலை செய்ய விடுங்க’ என்ற முக்கிய செய்தியைச் சுற்றி வருகின்றன, மேலும் பிராந்திய நகைச்சுவை ஜாம்பவான்களால் நடத்திக்காட்டப்படுகின்றன. இந்த TVC ஆனது, வெளிநாட்டுக் கல்விக்கான செலவினங்களைச் சுற்றிச் சுழல்கிறது, அதே நேரத்தில் இந்த டிஜிட்டல் வீடியோக்கள் வணிக நோக்கங்கள் மற்றும் வீட்டு மேம்பாடு போன்றவற்றிற்குத் தேவையான கடன் தேவைகளை உள்ளடக்குகிறது.

இந்த பிரச்சாரம் பற்றி முத்தூட் ஃபைனான்ஸ் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.பிஜிமோன் பேசுகையில், “இந்த பிரச்சாரத்தின் மூலம் எங்கள் பெயரில் வைக்கப்பட்ட  நம்பிக்கை மற்றும்  விசுவாசத்தை  புதிய மற்றும் பெரிய அளவிலான இளைய பார்வையாளர்களுக்கு அதிகரிக்க விரும்புகிறோம். இன்றைய இளைஞர்கள் நிதி அறிவு பெற்றவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் எங்களது தங்கக் கடன்கள் அவர்களின் பல்வேறு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறந்த பொருத்தமுள்ளதாக  இருக்கும். தங்கக் கடனை விரைவான மற்றும் எளிதான தீர்வாகக் கருதும் ஒரு பகுதி மக்கள் மட்டுமே உள்ளனர், ஆனால் நாம் ஆராய்வதற்கு களம்  அகலமாகவும் ஆழமாகவும் உள்ளது. இந்த பிரச்சாரம் அதை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் எங்கள் வாடிக்கையாளர்களின் கனவுகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வீட்டில் உபயோகமில்லாமல்  இருக்கும் தங்கத்தைப் பயன்படுத்துமாறு வலியுறுத்துகிறது.” என்று கூறினார்.

முத்தூட் ஃபைனான்ஸ்

இந்த புதிய பிரச்சாரம் குறித்து கருத்து தெரிவித்த மைத்ரி அட்வர்டைசிங் ஒர்க்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜு மேனன், “தென்னிந்தியாவின் மிகப்பெரிய தற்சார்பு    நிறுவனங்களில் ஒன்றாக, நாங்கள் வெளியை ஆழமாக ஆராய்ந்து, கடன் தேவைகளுக்காக தங்களுடைய தங்கத்தைப் பயன்படுத்துவதில் உணர்ச்சி ரீதியான தயக்கம் இல்லாத இளைய தலைமுறையினரை உள்ளடக்கிய, பெரிய அளவில் பயன்படுத்தப்படாத சந்தை இருப்பதை உணர்ந்தோம். இந்த முக்கிய கண்டுபிடிப்பின் அடிப்படையில், நான்கு தென்னிந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தனிப்பட்ட தொடர்பு உருவாக்குவதற்கு   பரிந்துரைத்தோம். இந்த பிரச்சாரத்தின் மூலம் எங்கள் பார்வையாளர்களுடன், குறிப்பாக இளையவர்களுடன் இணைவதற்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் நகைச்சுவையான அணுகுமுறையை நாங்கள் பின்பற்றினோம். இந்த பிரச்சாரத்தின் மூலம், சந்தையில் கிடைக்கும் மற்ற கடன் தெரிவுகளுக்கு மேல் தங்கக் கடனைப் பெறுவதற்கான உந்துதலை  நாங்கள் மீட்டெடுக்க முடியும், மேலும் தங்களுடைய செயலற்ற தங்கத்தை வேலை செய்ய விடுக்குமாறு     மக்களை வலியுறுத்துவோம். எங்கள் பன்முகத்தன்மை கொண்ட பார்வையாளர்களை தொடர்புகொள்ள, எங்கள் பிரச்சாரம், சமூக மற்றும் கலாச்சாரம்   உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், இப்போதே  எங்கள் விளம்பரங்கள் நான்கு வெவ்வேறு மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளன, மேலும் அதிக அளவிலான பார்வையாளர்களை  சென்றடைய பல்வேறு ஊடக கலவையைப் பயன்படுத்துகிறோம்  .”என்று கூறினார்.

முத்தூட் ஃபைனான்ஸ் தங்கக் கடன் ஆனது கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள், விரைவான மற்றும் எளிதான ஆவணப்படுத்துதல், செயலாக்கக் கட்டணம் இல்லை, உடனடி கடன் வழங்கல் ,iMuthoot மொபைல் APP பயன்பாட்டில் 24×7 ஆன்லைன் கடனை திரும்பிச் செலுத்துதல் வசதி, ஓவர் டிராஃப்ட் வசதி, பரிவர்த்தனையின்போது 24 காரட் மில்லி கிராம் வெகுமதி புள்ளிகள் மற்றும் Loan@Home சேவை போன்ற சிறந்த அம்சங்களை வழங்குகிறது..  வாட்ஸ்அப் பிசினஸ், ஃபோன்பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் மூலம் திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள் போன்ற பல தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களையும் வழங்குகிறது; இதில் புதிய கால சாட்போட் ChatBot சேவைகள் மற்றும் பல உள்ளன.

பிராண்ட் பற்றி மேலும் அறிய, ஐப் பார்வையிடவும் அல்லது 9567118882 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.