கடவுள் அருளால் 'காந்தாரா' வெற்றி – ரிஷப் ஷெட்டி

'கேஜிஎப் 2' படத்தை அடுத்து கன்னட சினிமாவான 'காந்தாரா' படம் ஒரு மாதத்தைக் கடந்தும் பான் இந்தியா படமாக வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படத்தின் வசூல் 200 கோடியைத் தாண்டிவிட்டது.

கடந்த வாரம் ஹிந்தியில் வெளியான பெரிய நடிகர்களான அக்ஷய்குமார் நடித்த 'ராம் சேது', அஜய் தேவகன் நடித்த 'தாங்க் காட்' ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. தற்போது அந்தப் படங்களைத் தூக்கிவிட்டு மீண்டும் 'காந்தாரா' படத்தைத் திரையிட்டுள்ளார்களாம்.

தமிழகத்திலும் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், “காந்தாரா' படத்தின் வெற்றி அதுவாக நடந்தது. நமது கலாச்சாரம், நாட்டுப்புறவியல் ஆகியவற்றை படத்தில் கொடுத்திருந்தேன். சினிமா என்பது ஒரு எனர்ஜி. கடவுள் அருளால் இந்தப் படம் பான் இந்தியா அளவில் வெளியாகி உள்ளது. இப்படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படம் என பலரும் கருத்து தெரிவித்து வருவதைப் பார்த்தேன். அது எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால், அது பற்றி எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. நான் வெற்றிக்காக உழைக்கவில்லை, வேலைக்காக உழைக்கிறேன், அவ்வளவுதான்,” எனத் தெரிவித்துள்ளார்.

'காந்தாரா' படம் 300 கோடி வசூலைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.