பெங்களூரு: கர்நாடகாவில் கோவில் திருவிழா தேரோட்டத்தில் தேர் சரிந்து விழுந்த சம்பவம் நடந்தது.
கர்நாடகாவில் சாம்ராஜநகர் பகுதியில் சன்னப்பனபுரா கிராமத்தில் பிரசித்த பெற்ற வீரபத்ரேஸ்வரா கோவில் ஐப்பசி மாத திருவிழா துவங்கியது. இத்திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது.
இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது தேர் கோவிலை சுற்றி வந்த சிறிது தூரத்தில் அதன் சக்கரம் முறிந்து சரிந்து விழுந்தது.
கீழ சாய்வதை அறிந்த பக்தர்கள் தெறித்து ஓடினர். இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தேர் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement