பாலம் அறுந்து விழுந்தபோது மரக்கிளைகளை பற்றி பிடித்து தப்பி விட்டதாக அஷ்வின் என்பவர் கூறியுள்ளார்
பாலம் இடிந்து விழுவதற்கு முன்பு 3 முறை அதில் இருந்து ஒரு சத்தம் வெளிவந்ததாக அஷ்வின் தெரிவித்துள்ளார்
இந்திய மாநிலம் குஜராத்தில் தொங்கு பாலம் விபத்திற்குள்ளானபோது அதிலிருந்து தப்பிய நபர் பேட்டி அளித்துள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 141 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 177 பேர் மீட்கப்பட்டு அவர்களால் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
PTI
இந்த நிலையில் விபத்தில் சிக்கி தப்பிய பிழைத்த அஷ்வின் மெஹ்ரா என்பவர் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் விபத்தில் தப்பித்தது குறித்து கூறுகையில், ‘மாலை 6.30 மணி இருக்கும். பாலத்தின் கயிற்றை சில குழந்தைகள் 20 பேர் வரை பிடித்து இழுத்தும், ஆட்டியபடியும் இருந்தனர்.
பாலம் இடிந்து விழுவதற்கு முன்பு 3 முறை அதில் இருந்து ஒரு சத்தம் வெளிவந்தது.
நான் அருகே இருந்த மரக்கிளைகளை பற்றி பிடித்துக் கொண்டேன். அதனால் தப்பி விட்டேன். என்னுடன் வந்த நண்பர் பிரகாஷ் என்பவரும் தப்பிவிட்டார்’ என தெரிவித்துள்ளார்.
அஷ்வினுக்கு கால் மற்றும் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.