குஜராத் மாநிலம், மோர்பி நகரில் ஓடும் மச்சு ஆற்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 141 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. பலரை தேடும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மீட்கப்பட்டவர்கள், மோர்பி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தநிலையில், விபத்து நடந்த மறுநாள், குஜராத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி அதைத் தொடந்து நடந்த நிகழ்ச்சியில்,”ஒரு புறம் வலி நிறைந்த இதயமாக இருந்தாலும் மறுபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது” எனப் பேசினார். மேலும், இன்று மோர்பி நகர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இருக்கிறார்.
Morbi Civil Hospital में रातों रात रंग-पुताई की जा रही है ताकि कल PM Modi के Photoshoot में घटिया बिल्डिंग की पोल ना खुल जाए
141 लोग मर चुके हैं, सैकड़ों लोग लापता हैं, असली दोषियों पर कोई कार्रवाई नहीं हुई लेकिन भाजपाइयों को फोटोशूट करके लीपापोती की पड़ी है..#BJPCheatsGujarat pic.twitter.com/KVDLdblD6C
— AAP (@AamAadmiParty) October 31, 2022
குஜராத் மோர்பி நகர் அரசு மருத்துவமனைக்கு பிரதமர் வருவதையொட்டி அவசர அவசரமாக அந்த மருத்துவமனை சீர்செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள இடர்பாடுகளை நீக்கியும், கழிவறைகளை சரிசெய்தும் வருகின்றனராம். இதையடுத்து, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கிறது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், “பாலம் அறுந்து விழுந்ததில் 141 பேர் இறந்துவிட்டனர், நூற்றுக்கணக்கானோர் காணவில்லை. உண்மையான குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஆனால் பா.ஜ.க-வினர் போட்டோஷூட்டுக்குத் தயாராகும் பணியில் மும்முரமாக உள்ளனர்” என பதிவிட்டிருக்கிறது.

காங்கிரஸும் ட்விட்டரில் சில படங்களைப் பகிர்ந்து, ” பிரதமர் மோடியின் வருகையையொட்டி, மருத்துமனையில் வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் நிறைய மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இவர்களோ ஏதோ நிகழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வெட்கமே இல்லை” என்று விமர்சித்துள்ளது.
त्रासदी का इवेंट
कल PM मोदी मोरबी के सिविल अस्पताल जाएंगे। उससे पहले वहां रंगाई-पुताई का काम चल रहा है। चमचमाती टाइल्स लगाई जा रही हैं।
PM मोदी की तस्वीर में कोई कमी न रहे, इसका सारा प्रबंध हो रहा है।
इन्हें शर्म नहीं आती! इतने लोग मर गए और ये इवेंटबाजी में लगे हैं। pic.twitter.com/MHYAUsfaoC
— Congress (@INCIndia) October 31, 2022
இந்த விவகாரம் தொடர்பாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது ,”ராஜ்கோட்டில் இருந்து மருத்துவமனையை சுத்தம் செய்வதற்காக அழைத்து வரப்பட்டிருக்கிறோம். பிரதமர் வருகையை முன்னிட்டு மருத்துவமனை முழுவதும் துப்புரவு பணியாளர்களால் நிரம்பி வழிகின்றனர். புதிய தண்ணீர் குளிரூட்டிகள், மருத்துவமனை படுக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. ” எனத் தெரிவித்தனர்.