குறைந்த வயதில் சீரியல் நடிகர் பரத் கல்யாண் மனைவி உயிரை காவு வாங்கிய பேலியோ டயட்! எச்சரிக்கை செய்தி


தமிழ் சீரியல் நடிகர் பரத் கல்யாண் மனைவி ப்ரியாவின் திடீர் மரணம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

பழம்பெரும் நடிகர் கல்யாண் குமாரின் மகன், பரத் கல்யாண். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது இவர் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மருத்துவமனை ஓனராக நடித்து வருகிறார்.

இவருக்கு ப்ரியா என்ற மனைவி இருந்தார்.
43 வயதான ப்ரியா பேலியோ டயட் ஃபாலோ பண்ணதால் டயாபடிக் அதிகமாகி அதனால் அவர் உயிர் பிரிந்துள்ளது.

கற்கால உணவுகளை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது பேலியோ டயட். இந்த டயட்டில் காய்கறிகள், உலர் பழங்கள், வேர்கள், இறைச்சி (ஈரல், மூளை) ஆகியவை அடங்கும். இதில் பால் சார்ந்த உணவுகள், தானியங்கள், பருப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, உப்பு, காபி மற்றும் மது ஆகியவை இடம் பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. பேலியோ டயட்டில் சிறுதானியங்கள் அவசியமற்றவை என கூறப்படுகிறது.

குறைந்த வயதில் சீரியல் நடிகர் பரத் கல்யாண் மனைவி உயிரை காவு வாங்கிய பேலியோ டயட்! எச்சரிக்கை செய்தி | Actor Bharath Kalyan Wife Died Of Paleodiet Health

ஆதிகால மனிதர்கள், இறைச்சியை மட்டுமே உண்டார்கள் என்பது பேலியோ டயட்டை ஊக்குவிப்பவர்கள் கூறும் வாதம். அவர்கள் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கூறுகிறார்கள்.

ஆனால், கார்போஹைட்ரேட், கொழுப்பு இரண்டுமே ஓரளவுக்கு உடலுக்கு தேவை என்பதை மறந்து விடக் கூடாது. இவை அளவுக்கு அதிகமாக போகும் போது தான் பிரச்சனையே தவிர, சரியான அளவு உட்கொண்டால் எந்த வித பிரச்சனையும் இல்லை.

இந்த பேலியோ உணவு முறையை மருத்துவர் கண்காணிப்பில் பின்பற்றுவது தான் சிறந்தது. தன்னிச்சையான முடிவுகள் ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த டயட்டை பின்பற்றும் போது, எடை குறைவதை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கக்காமல், உடல் மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்துவர வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறைந்த வயதில் சீரியல் நடிகர் பரத் கல்யாண் மனைவி உயிரை காவு வாங்கிய பேலியோ டயட்! எச்சரிக்கை செய்தி | Actor Bharath Kalyan Wife Died Of Paleodiet Health

NBT



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.