சாக்கு போர்த்தியபடி நூதன பைக் திருட்டு… மதுரையில் தொடரும் இரவு நேர கொள்ளை!

மதுரையில் சாக்குமூட்டையை போர்த்திகொண்டு போதையில் தடுமாறியபடி இரு சக்கர வாகனத்தை நூதனமாக திருடி சென்றுள்ளனர் நூதன திருடர்கள். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மதுரை மேல் அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் முன்பாக இரு சக்கர வாகனத்தை நிறுத்திவைத்துள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போன நிலையில் அருகில் தேடிப்பார்த்த நிலையில் கீரைத்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
image
இதனையடுத்து, திருப்பதியின் வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா பதிவை பார்த்தபோது மர்ம நபர்கள் சிலர் உடல் முழுவதிலும் சாக்குப்பையை போர்த்திகொண்டு மதுபோதையில் தள்ளாடியபடி வந்து திருப்பதியின் இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளளது. இந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கீரைத்துறை போலிசார் பக்க திருடிசென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
image
இந்த சிசிடிவி காட்சிகள், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுப்பானடி பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனம் திருடும் போகும் நிலை உள்ளதால், இரவு நேர ரோந்து பணியின் போது கூடுதல் காவலர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைக விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.