அலிபுர்துவார்,மேற்கு வங்கத்தில் அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள சுபாஷ் பாள்ளியில், கல்லுாரி மாணவி, தன் சகோதரியுடன் சமீபத்தில் ஒரு வணிக வளாகத்துக்கு சென்றார்.
அங்கு ஒரு கடையில் சில சாக்லேட்டுகளை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார். இதை கடைக்காரர் பார்த்துவிட்டதால், அதற்கு பணம் செலுத்தி விட்டார்.
ஆனால், அந்தக் கடைக்காரர் கண்காணிப்பு கேமராவில் பதிவான ‘வீடியோவை’ சமூக வலை தளங்களில் பதிவிட்டார்.
இதைப் பார்த்த மாணவி, நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement