சார்லஸ் சிறுபிள்ளையாக இருக்கும்போது, அவரது தாயாகிய மகாராணியார் அவரை வீட்டை விட்டு அனுப்பிவிட்டாராம்.
இந்த விடயத்தின் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய செய்தி உள்ளது.
சார்லஸ் சிறுபிள்ளையாக இருக்கும்போது, அவரது தாயாகிய மகாராணியார் அவரை வீட்டை விட்டு அனுப்பியதைக் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய மகாராணியார் சிறு பிள்ளையாக இருக்கும்போது, பெரும்பாலான ராஜகுடும்பத்துப் பிள்ளைகளைப்போல அவரும் பள்ளிக்கு அனுப்பப்படவில்லையாம். அதற்கு பதிலாக, ஆசிரியர்கள் அரண்மனைக்கு வந்துதான் அவருக்கு பாடம் கற்பித்திருக்கிறார்கள்.
அதனால் அவருக்கு சில இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அதாவது, பள்ளியில் மற்ற பிள்ளைகளுடன் பழகாததால், சிறு வயதில் பிள்ளைகளுக்கு ஏற்படும் சின்னம்மை (chickenpox) போன்ற நோய்கள் போன்ற நோய்களுக்கு அவர் ஆளாகவேயில்லை, நோய் தொற்றிய பிள்ளைகளுடன் அவர் பழகவும் இல்லை. ஆகவே, அவருக்கு பொதுவாக சிறுபிள்ளைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான நோயெதிர்ப்பு சக்தி உருவாகவேயில்லையாம்.
Image: Getty
பின்னர் அவர் வளர்ந்து திருமணமாகி இளவரசர் சார்லஸ் பிறந்த நிலையில், சிறு பையனாக இருந்த சார்லசுக்கு சின்னம்மை தொற்று ஏற்பட்டதாம். ஆகவே, அவரிடமிருந்து அவரது தாய்க்கு, அதாவது மகாராணியாருக்கு சின்னம்மை தொற்றிவிடக்கூடாது என்பதற்காக, சார்லசை மகாராணியார் மற்றும் அவரது சகோதரியான இளவரசி மார்கரட் ஆகியோரின் தோழியான Lady Anne Glenconner என்பவருடைய வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்களாம்.
Image: Max Mumby/Indigo/Getty Images
அப்போது என்று இல்லை,எப்போது அவருக்கு தொற்று ஏற்பட்டாலும் அவரை Lady Anne Glenconner வீட்டுக்கு அனுப்பி விடுவார்களாம். அப்படி சார்லஸ் Lady Anne Glenconner வீட்டுக்கு வந்ததால், அவரது குடும்பத்தினர் சார்லசுடன் நெருங்கிய நண்பர்களாகிவிட்டார்களாம்.
இந்த தகவலை Lady Anne Glenconner தான் எழுதிய ‘Lady in Waiting: My Extraordinary Life in the Shadow of the Crown’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Image: Bettmann/Corbis/Getty Images
Image: Slim Aarons/Getty Images