ஹைதராபாத்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது தெலங்கானாவில் தேசிய ஒற்றுமை யாத்திரையை தொடர்கிறார். நேற்று ரங்காரெட்டி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்திக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திம்மாபூர் என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறும்போது, ‘‘குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றி பெறும். குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச தேர்தல் வியூகத்தை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தீர்மானிப்பார். பாஜகவும் டிஆர்எஸ் கட்சியும் பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுகின்றன. மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் டிஆர்எஸ் போன்ற கட்சிகளுடன் காங்கிரஸ் கண்டிப்பாக கூட்டணி வைத்துக்கொள்ளாது. தெலங்கானாவில் தனித்தே போட்டியிடும்’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.