திருச்சி தீயணைப்பு நிலையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதில், தீயணைப்புத் துறை அதிகாரி உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று காலை தீயணைப்பு வீரரான பிரசாந்த், பெரிய சிலிண்டர் ஒன்றிலிருந்து சிறிய சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வாயு அழுத்தம் அதிகமாகி, சிறிய சிலிண்டர் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
இதில் காலில் பலத்த
காயமடைந்த பிரசாந்த் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரி சரவணன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.