இந்த காலப்பகுதிக்கு தேவையான நிலக்கரி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 60 ஆயிரம் மெட்ரிக் தொன் நிலக்கரியை ஏற்றிய கப்பல் கொழும்பு வந்துள்ளதுடன், இந்த காலப்பகுதிக்கு தேவையான 38 மெட்ரிக் தொன்நிலக்கரி இறக்குமதியில் இதுவே பிரதான நிலக்கரி தொகையாகும்.
மேலும் ஐந்து நிலக்கரி கப்பல்கள் விரைவில் நாட்டை வந்தடைய உள்ளதாகவும், அவற்றை முன்னர், ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை மின்சார சபையினால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், தற்போது உள்ள நிலக்கரி கையிருப்பு 2022 ஒக்டோபர் இறுதி வரை மட்டுமே போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளதுடன். மேலும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியினை நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.