ஜோதிடர் கூறிய வார்த்தையை நம்பி காதல் கணவரை கொன்ற இளம்பெண்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன் ராஜ் கடந்த 25ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இந்திய மாநிலம் கேரளாவில் காதல் கணவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இறுதியாக எடுத்துக் கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பாறசாலை பகுதியைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் (23) தனது காதல் மனைவி கிரீஷ்மாவினால் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
கிரீஷ்மாவுக்கு பணக்கார வரன் பார்க்கப்பட்ட நிலையில், முதல் கணவர் எப்படியும் இறந்துவிடுவார் என்று ஜோதிடர் கூறியுள்ளார்.
இதனை நம்பிய கிரீஷ்மா காதலன் ஷாரோன் ராஜை அவசரமாக திருமணம் செய்துள்ளார்.
பின்னர் அவர் எப்போது இறப்பார் என்று தெரியாததால் கொலை செய்ய நினைத்த கிரீஷ்மா, ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுள்ளார்.
இந்த நிலையில் கடைசியாக ஷாரோன் எடுத்த வீடியோ ஒன்றில் கிரீஷ்மா கையில் இரண்டு ஜூஸ் போத்தல்களை வைத்துள்ளார்.
ஒரு போத்தலை கிரீஷ்மா குடிக்கிறார். மற்றோன்றை கணவருக்கு கொடுக்கிறார். இந்த வீடியோவை எடுக்கும்போது கிரீஷ்மாவிடம் ஷாரோன் அனுமதி கேட்க, அவரோ வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதுதான் அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்த கடைசி வீடியோ என்று கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளது.