சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்து துறை செயலாளாளர்கள் பங்கேற்றுள்ளனர். பருவமழை தொடர்பாக பிற்பகலில் முதல்வர் ஆலோசனை நடக்கவுள்ள நிலையில் அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
