சென்னை: தமிழகத்தில் 37,387 அரசு பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளுக்காக ரூ.119.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்து தர அரசின் மானியம் உதவும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
