தமது மகளை தொடர்புகொள்ள முடியாமல் போனதாக கூறி, அவர் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.
குறித்த தம்பதியானது விவாகரத்தின் விளிம்பில் இருந்துள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல்
பிரான்சில் இரு பெண் பிள்ளைகள் மற்றும் அவர்களது தாயார் ஆகியோர் தங்கள் படுக்கையிலேயே சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு பிரான்சில் உள்ள அவர்களது வீட்டில் வளர்ப்பு நாயும் இறந்த நிலையில் கிடந்தது, ஆனால் உடல்களில் எதுவும் வன்முறையின் அறிகுறிகள் காணப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்த பெண்ணின் தாயார் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ள நிலையிலேயே குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமது மகளை தொடர்புகொள்ள முடியாமல் போனதாக கூறி, அவர் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.
@AFP
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தரை தளத்தில் உள்ள படிக்கட்டில் 41 வயது நபர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
முதல் மாடியில் அவரது பிள்ளைகள் 8 மற்றும் 11 வயதுடைய சிறுமிகள் இருவரின் சடலங்கள் அவர்களின் படுக்கையறையில் காணப்பட்டது.
இரண்டாவது மாடியில் அமைந்துள்ள படுக்கையறையில் 38 வயதான தாயார் சட;லமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டுமின்றி, இவர்களின் வளர்ப்பு நாயும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், வன்முறை சம்பவமோ ஆயுதங்களை பயன்படுத்தியதாகவோ எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் பிள்ளைகள் இருவரும் அந்த தாயாரும் விஷம் அருந்தியதற்கான அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், குறித்த தம்பதியானது விவாகரத்தின் விளிம்பில் இருந்துள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.