இது கண்காணிக்கும் நடவடிக்கை அல்லது கூட்டாக தாக்குதல் முன்னெடுக்கும் சதி வேலை என நிபுணர்கள்
இதுபோன்ற 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் மூன்று மட்டுமே தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது
பிரித்தானியாவின் Cheshire பகுதியில் அமைந்துள்ள அணுமின் நிலையம் மீது ஆறு ட்ரோன் விமானங்கள் வட்டமிட்டுள்ளதாக அரசாங்க ஆவணங்களில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நான்கு நாட்கள் இடைவெளியில் இருமுறை நடந்துள்ளதாகவும், இது 2019ல் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெயர் குறிப்பிடாத அணுமின் நிலையம் மீதும் பல எண்ணிக்கையிலான ட்ரோன் விமானங்கள் பறந்துள்ளதாக கூறுகின்றனர்.
@getty
இது கண்காணிக்கும் நடவடிக்கை அல்லது கூட்டாக தாக்குதல் முன்னெடுக்கும் சதி வேலை எனவும் நிபுணர்கள் தரப்பு எச்சரித்துள்ளனர்.
மட்டுமின்றி, 2019 மே மாதம் முதல் கடந்த ஆண்டு நவம்பர் வரையில் இதுபோன்ற 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் மூன்று மட்டுமே தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், ட்ரோன்களை பறக்கவிட்டு புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவு செய்யும் நபர்களால் இதுபோன்ற சம்பவம் நேரலம் எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
ஆனால், குறிப்பிட்ட சில சம்பவங்களில், கண்டிப்பாக மர்மம் இருப்பதாகவும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ட்ரோன்கள் ஒரே நேரத்தில் வட்டமிடுவது என்பது சதியாக கூட இருக்கலாம் என எச்சரித்துள்ளனர்.
@getty
இந்த விவகாரத்தில் மக்கள் அச்சப்படத் தேவை இல்லை எனவும், பிரித்தானியாவின் அணுமின் நிலையங்கள் மீது அத்துமீறி நுழையும் சதி திட்டம் ஏதும் இதுவரை அடையாளம் காணப்பட்டவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.