பிரேசிலில் நூலிழையில் வெற்றியை தவறவிட்ட அதிபர் போல்சனாரோவுக்கு ஆதரவாக லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல்!

பிரேசிலியா,

உலகின் 4-வது பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த 2-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபா் ஜெயிா் போல்சனாரோ மீண்டும் போட்டியிட்டார்.

அவருக்கு எதிராக முன்னாள் அதிபரும், இடதுசாரி கட்சியான தொழிலாளா் கட்சியின் தலைவருமான லூலா டி சில்வா களம் இறங்கினார். தேர்தலில் லூலா 50.9 சதவிகித வாக்குகளும், பொல்சொனாரோ 49.1 சதவிகித வாக்குகளும் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிக்கு தேவையான 50 சதவீத வாக்குகளை பெற்று இடதுசாரி தலைவர் லூலா டி சில்வா வெற்றி பெற்றதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த வலதுசாரி தலைவரான ஜெயிர் போல்சனாரோவை தோற்கடித்து லூலா டி சில்வா வெற்றி பெற்றுள்ளார்.அவர் 3-வது முறையாக பிரேசிலின் அதிபராகி உள்ளார்.

இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்று பிரேசிலின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள லூலா டி சில்வாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல் நடத்தினர்.லூலா அதிபராக வருவதை தடுக்க ராணுவ புரட்சிக்கு அழைப்பு விடுத்து சாலை மறியல் நடத்தினர்.

பிரேசிலில் கோயாஸ் உள்ளிட்ட 12 மாகாணங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தற்போது பதவி விலகவுள்ள அதிபா் ஜெயிா் போல்சனாரோவுக்கு ஆதரவாக லாரி ஓட்டுநர்கள் போராட்டம் அமைந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.