மும்பை: பாலிவுட் நடிகை கேத்ரினா கைப் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். விஜய் சேதுபதி ஜோடியாக மேர்ரி கிறிஸ்மஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் கேத்ரினா கைப். அதே சமயம் அவர் நடித்துள்ள போன் பூத் இந்தி படம் முடிந்துவிட்டது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கேத்ரினா கலந்துகொண்டார். அப்போது ஹேர் ஸ்டைலை அவர் முற்றிலுமாக மாற்றியிருந்தார். அதே சமயம், அவரது முகமும் மாறியிருந்தது. இதையடுத்து அவரது பழைய புகைப்படத்தையும் இப்போது போன் பூத் புரமோஷனில் பங்கேற்ற புகைப்படத்தையும் ஒன்றாக வெளியிட்ட நெட்டிசன்கள், கேத்ரினா கைப் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்.
அதனால்தான் அவரது முகம் வீங்கி காணப்படுகிறது என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தற்போதைய புதிய தோற்றத்தில் கேத்ரினாவின் உதடுகள், கண்களில் மாற்றம் தெரிகிறது. இதனால் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதைத்தான் சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். இதற்கு கேத்ரினா எந்த பதிலும் கூறவில்லை. சமீபத்தில் ஸ்ருதிஹாசன், அதுல்யா ரவி, கஜோலின் மகள் நைசா உள்ளிட்டோர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது குறிப்பிடத்தக்கது.