தஞ்சை பெரிய கோவிலை கட்டிய பேரரசன் ராஜராஜ சோழனின் 1037 ஆம் ஆண்டு சதய விழாவை ஒட்டி நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல் ஜொலிக்கிறது.
தமிழர்களின் கட்டட கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய பேரரசன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அவர பிறந்த தினம் அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 1037 ஆம் ஆண்டு சதய விழா வருகிற 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி, தஞ்சை பெரிய கோவில், அம்மன் சன்னதி பிரகாரங்கள், உள்கோட்டை சுவர் வெளிகோட்டை சுவர், பெரியக் கோவில் வளாகம், ராஜராஜ சோழன் சிலை, அண்ணா சாலை உட்பட நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல் ஜொலிக்கிறது.
மாநகராட்சி சார்பில் சதய விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM