உசிலம்பட்டி அருகே ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் தலை சிதறி உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி எனும் இடத்தில் மதுரையிலிருந்து போடியை நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த சோழவந்தானை அடுத்துள்ள திருவாழவாயநல்லூரைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிங்கராஜ் ஆகியோர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களில் கார்த்திக் என்பவர், காலில் முன்பொருமுறை ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அப்படித்தான் இன்றும் சிங்கராஜ் உடன் இருசக்கர வாகனத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள சின்ன ஓவுளாபுரம் கிராமத்திற்கு சென்று கட்டு போட்டுவிட்டு திரும்பி வந்திருக்கிறார். அப்போதுதான் விபத்தில் சிக்கி கார்த்திக் மற்றும் சிங்கராஜ் என்ற இருவரும் உயிரிழந்தாக கூறப்படுகிறது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் தலை சிதறி உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துவிட்டு விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
