துப்பாக்கி என்றால், பொதுவாக நமது நினைவுக்கு வருவது ஹாலிவுட் சினிமாக்கள் தான். துப்பாக்கியால் எதிரிகளை சுட்டு பொசுக்குகின்ற கொடூர காட்சிகளை ஹாலிவுட் படம் தான் நமக்கு அதிகமாக காட்டின. ஆனால் இன்று துப்பாக்கிகளுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகிற நாடுகளில் அமெரிக்கா தான் முன்னணியில் உள்ளது.
அந்தளவுக்கு துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டதால், அமெரிக்க அரசு துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த முடியாமல், திணறி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் டெக்சாஸ் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம், நியூயார்க் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சம்பவம், கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம், டெக்ஸாசில் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு என்று அடுத்தடுத்து 4 சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.
அமெரிக்காவில் துப்பாக்கி வியாபாரம் செழித்து வளர்வது தான் காரணம் ஆகும். புதிய ஆடைகளை போல ஆயுதங்களையும் அமெரிக்காவில் உள்ள கடைகளிலும், ஆன்லைன் மூலமாகவும் எளிதாக வாங்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது தான் இதற்கு காரணம்.
தூக்கத்தை கெடுத்த ஐபிஎஸ்; திமுக வட்டாரத்தில் பரபரப்பு!
துப்பாக்கி சூடு தான் என, இல்லாமல் வெட்டி படுகொலைகள் செய்வதும் அங்கு சர்வ சாதாரணமாகவே நடக்கிறது. அதுபோன்ற சம்பவங்களுக்கு சாட்சியாக தான் மனித தலையுடன் நாய் சுற்றி வந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அமெரிக்கா, மெக்சிகோவில் உள்ள சாலையில் இரவு ஒரு நாய் துண்டிக்கப்பட்ட மனித தலையை வாயில் கவ்வியபடி சுற்று திரிந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இறைச்சி என்று நினைத்து மனித தலையை சாப்பிடுவதற்கு எங்காவது எடுத்து செல்லலாம் என நாய் சுற்றி திரிந்துள்ளது. மெக்சிகோ வடக்கே உள்ள ஜாகேட்டிகேஸ் என்ற மாகாணத்தில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மனித தலையை நாய் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
அனல் கக்கிய அண்ணாமலை-பாகம் 1: வாழ்க கலைஞர், தளபதி, இளவரசர் உதயநிதி!
துண்டாக்கப்பட்ட தலை தென்பட்ட, மான்டே எஸ்கோபெடோ நகரத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் ‘அடுத்த தலை உன்னுடையது’ என்று எழுதப்பட்ட வாசகம் எச்சரிக்கை பலகையுடன் தொடங்க விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் போதைப்பொருள் ஆசாமிகள் அதிகாரிகளை அச்சுறுத்தும் நோக்கத்தில் இது போன்றவற்றை செய்து இருக்கலாம் என, கூறியுள்ளனர்.