முதல்வர் பேசிய முழு விவரம் இதோ..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், மாவட்டங்களில் நடைபெற்றும் வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஆட்சியர்களிடம் பேசிய முதல்வர், “மழைநீர் தேங்காதவாறு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் கடமையும், பொறுப்பும் ஆகும். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே மீட்க வேண்டும்.

மின்சாரம், பால், குடிநீர் உள்ளிட்டவை தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். மக்களை காக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, வேளாண்துறை, தீயணைப்பு துறைகள் என அனைவரும் தனித்தனியே செயல்படாமல் ஒருங்கிணைந்து செயல்படுங்கள். தொலைபேசியிலோ, வாட்ஸ்அப்பிலோ வரக்கூடிய புகார்களை உடனே நிவர்த்தி செய்ய வேண்டும்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்று மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும். மண்டல அளவில் பல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும்.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பழுதடைந்த, பலவீனமான சுற்றுச்சுவர்கள் அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர், மின்சார வசதி கிடைப்பதை கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். அரசுத்துறையினருடன் மக்களும் இணைந்து செயல்படுவதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். மின்சாரம் சார்ந்த விபத்துகளை தடுக்க வேண்டும். அதிகாரிகளிடம் தெரிவித்தோம், உடனடியாக நிவர்த்தி செய்தார்கள் என மக்கள் கூறுவதே மிகப் பெரிய பாராட்டு. சிறு தவறு நிகழ்ந்தாலும் அரசுக்கு மிகப் பெரிய கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடும். அதே நேரத்தில், சிறு உதவி என்றாலும் அது பெரிய நல்ல பெயரை உருவாக்கும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.