
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜ் என்பவர் ஸ்டிக்கர் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் 17 வயது மகன் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.
சிறிது தூரம் சென்ற நிலையில், அச்சிறுவன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கார்த்திக் ராஜை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். தகவலறிந்த போலீசார் கார்த்திக் ராஜை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், 6 மாதங்களுக்கு முன்பு சிறுவன் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் கார்த்திக் ராஜின் உறவினர் சம்பத் உயிரிழந்தார்.
அதனால் கார்த்திக் ராஜின் சகோதரர் உட்பட அவரின் உறவினர்கள் சிறுவனை அடித்துள்ளனர். இதனால் கார்த்திக் ராஜ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் கோபத்தில் இருந்த சிறுவன் கஞ்சா போதையில் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
newstm.in