பிரித்தானிய ராஜகுடும்பத்தில் வித்தியாசமான சில மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வழக்கத்துக்கு மாறான சில விடயங்களைச் செய்திருக்கிறார்கள்.
அப்படி தங்கள் மூதாதையர்களின் கல்லறையைத் திறந்து பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார் மன்னர் நான்காம் ஜார்ஜ் என்பவர்.
மன்னர் நான்காம் ஜார்ஜ் என்பவர், தங்கள் மூதாதையர்களின் கல்லறையைத் திறந்து பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்.
ராஜ குடும்பத்தில் பல வித்தியாசமான விடயங்கள் உள்ளன. உதாரணமாக, இளவரசி யூஜீனி மற்றும் மேகன் மார்க்கல் மணப்பெண்களாக நடைபோட்ட புனித ஜார்ஜ் சிற்றாலயத்தின் கீழ்தான், மன்னர்களான எட்டாம் ஹென்றி, ஐந்தாம் ஜார்ஜ், முதலாம் சார்லஸ் முதலானவர்களின் கல்லறைகளும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
சரி, விடயத்துக்கு வருவோம்…
இந்த நான்காம் ஜார்ஜ் மன்னர், தன் மூதாதையர்களின் கல்லறைகளைப் பார்க்க விரும்பியிருக்கிறார். ஜார்ஜ் மன்னரும், சர் ஹென்றி ஹால்ஃபோர்ட் என்பவருமாக அந்த தேவாலயத்துக்குக் கீழே சென்று, மன்னர் முதலாம் ஜார்ஜ் மற்றும் எட்டாம் ஹென்றி ஆகியோரின் கல்லறைகளைத் திறந்திருக்கிறார்கள்.
திடீரென கல்லறை திறக்கப்பட்டதால், மன்னர் சார்லசின் கண் பட்டென அவரது முகத்திலிருந்து வெளியே துள்ளியதாம். மன்னர் சார்லசின் நினைவாக அவரது உடலிலிருந்து ஒரு பாகத்தையும் எடுத்துச் செல்ல விரும்பிய மன்னர் ஜார்ஜ், அவரது முதுகெலும்பின் ஒரு பாகத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து திரும்பியிருக்கிறார்.
அந்த எலும்பு பல தலைமுறைகளாக மன்னர்களிடம் கொடுக்கப்பட்டு வந்ததாம். ஆனால், இதை கேள்விப்பட்டு சீற்றமடைந்த விக்டோரியா மகாராணியார், ஏழாம் எட்வர்ட் என்னும் பெயரில் பின்னர் மன்னரான தனது மகனிடமிருந்து அந்த எலும்பைப் பறித்து, மன்னருடைய கல்லறைக்குப் பக்கத்திலேயே ஒரு பெட்டியில் அதை வைக்கும்படி கட்டளையிட, அப்படியே அந்த கட்டளை நிறைவேற்றப்பட்டதாம்.
image – townandcountrymag