ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைனின் கீவ், கார்கிவ் மற்றும் செர்காசி பகுதிகள் இருளில் மூழ்கின.
முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதல்களால் மின் நிலையங்களில் கடும் சேதம் ஏற்பட்டதையடுத்து கீவ் நகரில் நேற்று 80 சதவீதம் மின்வெட்டு ஏற்பட்டது.
குடிநீர் குழாய்களும் சேதமடைந்ததால் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை மோசமாக இருப்பதால் தண்ணீரை சேமித்து வைக்குமாறு கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ வலியுறுத்தியுள்ளார்.