நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாத்து மக்களை வாழவைக்கும் சவாலை ,ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இம்முறை வரவு செலவுத்தி;ட்டத்தில் எதிர்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சூழ்நிலையில் வரலாற்றில் சவால்மிக்க வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
இந்த நெருக்கடிமிக்க சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிகள் வழமை போன்று செயற்படுவது உண்மையில் கவலைக்குரிய விடயமாகும். ஜனாதிபதி ஒட்டுமொத்த மக்களுக்காகவும் கடுமையான சவாலை எதிர்கொண்டு வருகிறார்.
இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் இதனை புரிந்து கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வலியுறுத்தினார்.