திருவனந்தபுரம்: தமிழக – கேரள எல்லையில் விஷம் கொடுத்து காதலன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அடுத்த அதிர்ச்சி வெளியாகியுள்ளது. போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி? என காதலி கிரீஷ்மா கூகுளில் தேடியது அம்பலமாகியுள்ளது. வழக்கில் சிக்கிக்கொண்டால், எத்தனை வருடம் தண்டனை என்பதையும் முன்பே கிரீஷ்மா கூகுளில் தேடியுள்ளார்.
