எடாவா : உத்தர பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் நள்ளிரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு வீட்டுக்குள் முதலை நுழைந்ததால் கிராமமே பரபரப்பானது.
உத்தர பிரதேசத்தின் எடாவா அருகே உள்ள ஜைதியா கிராமத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ஹர்னாம் சிங் என்பவர் வீட்டில் ஆடுகள் திடீரென கத்தின. அவரது மகள் எழுந்து விளக்கை போட்டு பார்த்த போது, ஒரு அறைக்குள் முதலை ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்தார். அந்த அறைக்குள் அவரது பாட்டி தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி வீட்டில் இருந்த அனைவரும் அலறியடித்து வெளியே ஓடினர். பின், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் வரும்வரை வீட்டை பூட்டி வைத்திருந்தனர்.
நேற்று காலையில் வனத்துறை அலுவலர்கள் வந்து வீட்டுக்குள் இருந்த 2வயது முதலையை பிடித்தனர். இந்த சம்பவத்தால் ஹர்னாம் சிங் குடும்பத்தினர் மட்டுமின்றி கிராம மக்கள் அனைவருமே விடிய விடிய துாங்காமல் விழித்திருந்தனர். அருகிலுள்ள கால்வாயில் இருந்து இரை தேடி அந்த முதலை வீட்டுக்குள் நுழைந்திருக்கலாம் என வன அலுவலர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement