
ஸ்ருதிகா உடன் நடனமாடிய செப் தாமு
பிரபல சமையல் கலைஞரான செப் தாமு முன்னதாக பல தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ஆனால், அவரை வேறொரு கோணத்தில் காட்டிய நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். அவரை மட்டுமல்ல, சமையல் நிகழ்ச்சியை கூட காமெடியாக மாற்ற முடியும் என நிரூபித்து காட்டி ஹிட் அடித்த நிகழ்ச்சி அது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே இன்று பிரபலங்களாக வலம் வருகின்றனர். அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 3 முடிவுக்கு வந்தது. அதில் ஸ்ருதிகா அர்ஜூன் டைட்டில் பட்டம் வென்றார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் தற்போது செப் தாமுவை சந்தித்துள்ள ஸ்ருதிகா அர்ஜூன் அவருடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு குழந்தை போல் செப் தாமு க்யூட்டாக நடனமாடியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.