132 பேரை பலி கொண்ட தொங்கு பாலம்: விபத்துக்கு முழு பொறுப்பேற்றது குஜராத் அரசு!

காந்திநகர்: 132 பேரை பலி கொண்ட குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி தொங்கு பாலம்  விபத்துக்கு குஜராத் அரசு முழு பொறுப்பேற்கும் என்று மாநில அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6:40 மணியளவில் மோர்பி தொங்கு பாலம்  இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கான மக்கள் தண்ணீரில் விழுந்தனர். இடிந்து விழுந்த நேரத்தில், குஜராத் பாலத்தில் 500க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் சத் பூஜை சடங்குகளுக்காகவும், விழாக்களைப் பார்க்கவும் அங்கு கூடி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாலம் இடிந்து விழுந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இந்தபெரும் விபத்துக்குப் பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் ஆற்றில் விழுந்தனர். குஜராத்தில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது. இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை குஜராத்தில் NDRF உடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சுமார் 100 பேர் இன்னும் காணவில்லை. மேலும், 177 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின்போது குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகருக்கு மேற்கே 240 கிமீ தொலைவில் உள்ள மோர்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டா் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்தப் பாலம் திகழ்கிறது.கடந்த 6 மாதங்களாக அந்தப் பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதையொட்டி மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து ஐந்து நாள்களுக்கு முன்பு (அக். 26) குஜராத்தி புத்தாண்டன்று மீண்டும் திறக்கப்பட்டது.

அந்தப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், அந்தப் பாலம்  மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவா்கள் நதியில் விழுந்தனா். நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் மாத புனரமைப்புக்கு பின், திறப்பட்ட 4 நாள்களில் நிகழ்ந்த மிக்பெரிய கோர விபத்துக்கு பாலத்தில் ஏாளமானோர் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்பட்டதே காரணம் என கூறப்படுகிறது.

தொங்கு பாலத்தை புனரமைக்க அரசிடம் டெண்டரைப் பெற்று பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம், பணி முடிந்த பின் அதிகாரிகள் பாலத்தின் உறுதித்தன்மையை பரிசோதித்து அதற்கான சான்றிதழை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த கோர விபத்தால் அதிர்ச்சியடைந்துள்ளோம். இந்த கோர விபத்துக்கு குஜராத் அரசு முழு பொறுப்பேற்தாக அம்மாநில அமைச்சர் பிரஜேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

தொங்கு பாலம் அறுந்து விழுந்த இந்த கோர விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என கூறினார்.இந்த கோர விபத்து சம்பவத்தை அடுத்து குஜராத்தில் பங்கேற்க இருந்த சில நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.