சென்னை: தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை பகல் 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
