
பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் துளு மொழி பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தவர்.

1994 உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யா தமிழில் மணிரத்தினத்தின் ‘இருவர்’ படம் மூலம் அறிமுகமாகி இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

மருத்துவம் படிக்க விரும்பிய ஐஸ்வர்யா ராய், மாடலிங் நடிப்பு என்று சினிமா துறையில் கால்பதித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

90 களில் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா ராய் சில வருடங்களில் சினிமாவில் சிறந்த நடிகையாக தனது இடத்தை வெற்றிகரமாக உறுதிப்படுத்தினார்.

பின் 2007ம் ஆண்டு ராய் இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை மணம் முடித்தார். இவர்களது நிச்சயதார்த்த அறிவிப்பு 2007ம் ஆண்டு ஜனவரி 14-ல் வெளியிடப்பட்டது.

பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இவர்களது திருமணம் பன்ட் குடும்ப முறைப்படி நடந்தேறியது.

இவர் பல தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் என மொத்தம் 6 தமிழ் படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார்.

இவர், சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘அம்பீ (Ambee)’ என்கிற நிறுவனத்தில் முதலீடு செய்து சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

அழகு, தனது சிறப்பான நடிப்பு மற்றும் நடனம் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு இன்று 49 வது பிறந்த நாள். பிறந்தநாள் வாழ்த்துகள் ஐஸ்வர்யா ராய்