Gujarat bridge collapse: அமெரிக்க அதிபர் பைடன் இரங்கல்

குஜராத்தின் மோர்பி நகரில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொங்கு பாலம் ஒன்று, நேற்று முன்தினம் மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர சம்பவத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்காணோர் காயமடைந்து, தங்களின் குடும்பத்தினர் பலரையும் இழந்துள்ளனர். 

இந்த சம்பவம் உலகையே அதிரச் செய்தது. விபத்து நிகழ்ந்த பாலம், ஐந்து நாள்களுக்கு முன்னர்தான் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், குஜாராத் வருடப்பிறப்பை முன்னிட்டு பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக விதிகளை முறையாக பின்பற்றாமல், அவசர அவசரமாக பாலத்தை திறந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த விபத்திற்கு தொடர்புடைய பத்திற்கும் மேற்பட்டோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து, உலகெங்கிலும் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் குஜராத் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

மேலும் படிக்க | தொங்கு பாலங்கள் ஆபத்தானதா… குஜராத் மோர்பி பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன?

இதுகுறித்து பைடன் தரப்பில் வெளியான செய்தி குறிப்பில்,”இன்று, நம் இதயங்கள் அனைத்தும் இந்தியாவுடன் இருக்கிறது. பாலம் இடிந்ததில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஜில்லும் (அவரது மனைவி ஜில் பைடன்), நானும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் பல உயிர்களை இழந்த குஜராத் மக்களுடன் துக்கத்தையும் பகிர்ந்துகொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்காவும் இந்தியாவும் தவிர்க்க முடியாத கூட்டாளிகள். நமது குடிமக்களுக்கு இடையே ஆழமான பிணைப்புகள் உள்ளன. இந்த இக்கட்டான நேரத்தில், இந்திய மக்களுடன் நாங்கள் தொடர்ந்து துணை நிற்போம், ஆதரவளிப்போம்” என்றும் தெரிவித்துள்ளார். 

குஜராத் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். முன்னதாக, விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணைத் தொகையாக பிரதமர் நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சமும்,  காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக குஜராத் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Gujarat bridge collapse : விபத்துக்கு காரணம் இளைஞர்களா? – வைராலகும் வீடியோ… முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.