TNPSC : நில அளவையர், வரைவாளர் தேர்வு – நுழைவுச்சீட்டை பதிவிறக்குவது எப்படி?

TNPSC Admit Cards 2022 RELEASED : 789  நில அளவையர், 236 வரைவாளர், 55 சர்வேயர்கள் என மொத்தம் 1089 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்ப உள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 6) அன்று நடைபெறுகிறது. இதன் முதல் தாள் காலை 9.30 மணியில் இருந்து மதியம் 12.30 வரையும், இரண்டாம் தாள் மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணிவரை இரண்டு பிரிவாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டை டிஎன்பிஎஸ்சி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வாளர்கள் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டை அதிலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

நுழைவுச்சீட்டை  பதிவிறக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்: 

–  டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in பக்கத்திற்கு செல்லவும்.

– ‘Candidates Corners’ என்ற பகுதியில் இருக்கும் “Registered User” என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும். 

– ‘Already Registered’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

–  அதில், உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிடவும்.

– உள்நுழைந்து Admit Card இணைப்பைக் கிளிக் செய்யவும்.

–  பின்னர் தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதையும் சரிபார்த்து பதிவிறக்கவும்.

விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் விண்ணப்பதாரரின் ஒரு முறை பதிவு (OTR டாஷ்போர்டு) என்ற முறையின் மூலம் மட்டுமே நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.