வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: இது உலகளாவிய நெருக்கடியின் காலம் என்றாலும், உலகெங்கிலும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் இந்தியா வலுவாக உள்ளது. பொருளாதாரத்தை வலுப்படுத்த, தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என பிரதமர் மோடி கூறினார்.
பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து நடத்தும் இன்வெஸ்ட் கர்நாடகாவின் 2022ம் ஆண்டு உலகளாவிய முதலீட்டார்கள் மாநாடு நடை பெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்து, காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, பிரதமர் மோடி பேசியவதாவது: துணிச்சலான சீர்திருத்தங்கள், பெரிய உள்கட்டமைப்பு, சிறந்த திறைகளுடன் புதிய இந்தியாவை நோக்கி நகர்கிறோம். இளைஞர்களின் திறனை கட்டுப்படுத்துவதற்கு பதில் புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கான சூழலை தருவோம். இந்தியாவின் முதலீடு செய்வது என்பது உலகத்திற்கான முதலீடு.
இது வளமான கர்நாடக சலுகைகளை வெளிப்படுத்தும். ஸ்டார்ட்அப் உலகம் உட்பட பல்வேறு துறைகளில் கர்நாடகாவின் முன்னேற்றம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. பாதுகாப்பு, ட்ரோன்கள், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு தனியார் துறைகளின் முதலீடுகளை ஊக்குவித்துள்ளோம். பராம்பரியம் மற்றும் தொழில்நுட்பம், கலாச்சாரம், இயற்கை ஆகியவற்றை பற்றி பேசும் போது நினைவுக்கு வருவது பெங்களூரு நிறுவனங்கள் ஆகும்.
இது உலகளாவிய நெருக்கடியின் காலம் என்றாலும், உலகெங்கிலும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் இந்தியா வலுவாக உள்ளது. பொருளாதாரத்தை வலுப்படுத்த, தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். தடையற்ற ஓப்பந்தங்கள், நமது இந்தியாவின் நிலையை உலகத்திற்கு எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement